இம்முறை க.பொ.த. சதாரண தர பரீட்சையில் கொழும்பு- 10 அல்ஹிதாயா மாணவன் எம்.ஏ.ஏம். பைஸாம் 9A சித்தி பெற்று கல்லூரியில் வரலாற்றுச் சாதனைபடைத்துள்ளார்.
மற்றும் எம்.என்.எம். நபீல் (6A), ஏ.கே.எப். கதீஜா (5A), எம்.எப்.எம். பாரிஜ் (5A), ஜே.எம். கதீர் (4A) ஆகியோரும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர். இவர்களுக்கும் சித்தியடைந்த ஏனைய மாணவர்களுக்கும் அதிபர்எம்.என்.எம் .நிஹார், ஆசிரியர்கள், பழைய மாணவர் சங்க தலைவர் அல்ஹாஜ் எம்.ஸீ. பஹாரிதீன், செயலாளர், உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கசெயலாளர், உறுப்பினர்கள், பெற்றோர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.