மு.இராமச்சந்திரன்-
நாட்டின் அறிய வைகையில் பறவை இனங்களில் ஒன்றான மலைக்குருவியை சட்ட விரோதமாக விற்பனை செய்தவரை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து ஹட்டன் டிக்கோயா பிரதேசத்திலுள்ள வீடொன்றை சுற்றிவளைத்த போதே விற்பனைக்காக மலைக்குருவியை வைத்திருந்த போதே 30.03.2017 இரவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். ஹட்டன் சிங்கமலை புகையிரத சுரங்கப்பாதையில் வாழ்ந்த மலைக்குருவியினமே இவ்வா று மீட்கப்பட்டுள்ளது
அறிய வகை பறவை இனமான மலைக்குருவி சிங்கமலை சுரங்கப்பகுதியில் 30 கூடுகளுடன் வாழ்ந்து வருகின்றது. அன்மைகாலமாக குறித்த பகுதியில் மலைக்குருவியை பிடித்தவர்களை பொலிஸார் கைது செய்த நிலையிலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஐந்து நட்சத்திர ஹேட்டல்களில் மலைக்குருவின் சூப் செய்யப்பட்டு வெளிநாட்டு உள்ளாச பிரயாணிகளுக்கு விற்பனை செய்வதால் ஹேட்டல்க ளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காகவே இவ்வாறு மலைக்குருவிகளை பிடித்து விற்பனை செய்யவதாக பொலிஸார் தெரிவித்தனர் மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.