நோட்டன் பிரிட்ஜ் நிருப ர் மு.இராமச்சந்திரன்-
ஹட்டன் ஸ்டெதன் தோட்ட(மல்லியப்பு தோட்டம்) புரூட்டில் டிவிசனில் 50 தனி வீடுகள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழா மலையக புதிய கிராமங்கள் உட்டகட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் 31.03.2017 நடைபெற்றது. 7 பேர்ச்சஸ் காணியில் 550 சதுர அடியில் நிர்மாணிக்கப்படும் மேற்படி வீடமைப்பு திட்டத்திற்கு தலா 10 லட்சம் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பசும் பொன் வீடமைப்பு திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படும் இவ் வீமைப்பு திட்ட அடிக்கல் நாட்டு நிகழ்வில் மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் ஹட்டன் டிக்கோயா நகரசபையின் முன்னால் தலைவர் அ.நந்தகுமார் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.