தென்கிழக்குப் பல்கலையின் ஊழியர்சங்க தலைவராக நௌபர்!

எம்.வை.அமீர்-
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 19வது வருடாந்த ஒன்றுகூடலின்போது மஹ்மூது முகம்மது நௌபர் 2017/2018ஆம் வருடத்துக்கான ஊழியர்சங்க தலைவராக தெரிவானார். 2017-03-30 ஆம் திகதி தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீட கேட்போர்கூடத்தில், 2016/2017 ஆம் வருடத்துக்கான தலைவர், யாசீன்பாவா முபாறக் தலைமையில் இடம்பெற்ற வருடாந்த ஒன்றுகூடலின்போதே நௌபர் தலைவராக தெரிவுசெய்யப்பட்டார்.

நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீம் அவர்களும் கௌரவ அதிதியாக பிரதிப்பதிவாளர் ஏ.தையூப் அவர்களும் கலந்துகொண்டு உரையாற்றினர். இரண்டு பிரிவுகளாக இடம்பெற்ற இந்நிகழ்வின் இரண்டாம் நிகழ்வின்போதே 2017/2018 ஆம் வருடத்துக்கான ஊழியர்சங்க நிருவாகிகள் தெரிவுசெய்யப்பட்டனர்.

ஊழியர்சங்கத்தின் யாப்புக்கு அமைவாக கடந்த 2017.03.01 ஆம் திகதி 2017/2018 ஆம் வருடத்துக்காக நிருவாகிகளை தெரிவதற்கான வேட்புமனுக்கள் கோரப்பட்டிருந்தன. இதன்பிரகாரம் அதிகமான பதவிகளுக்கு ஊழியர்களால் வேட்புமனுக்கள் செய்யப்பட்டிருந்தன. சில பதவிகளுக்கு மனுக்கள் கோரப்படாததால் அப்பதவிகளுக்காக பொதுச்சபையினால் ஊழியர்கள் பிரேரிக்கப்பட்டு நியமிக்கப்பட்டனர். சில பதவிகளுக்கு தனிநபர்களே மனுச்செய்திருந்ததால் அவர்கள் நேரடியாக குறித்த பதவிகளுக்கு தெரிவானார்கள். அதேவேளை இன்னும் சில பதவிகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட ஊழியர்கள் மனுச்செய்திருந்ததால் ஊழியர்களுக்கிடையே தேர்தல் ஒன்று நடத்தப்பட்டு நிருவாகிகள் தெரிவுசெய்யப்பட்டனர்.

2017/2018 ஆம் வருடத்துக்கான ஊழியர்சங்க நிருவாகிகளாக பின்வருவோர் தெரிவானார்கள் மஹ்மூது முகம்மது நௌபர் தலைவராகவும் யாசீன்பாவா முபாறக் செயலாளராகவும் முகம்மது தம்பி முகம்மது தாஜுதீன் உபதலைவராகவும் உபசெயலாளராக சலீம் றமீஸும் பிரயோக விஞ்ஞான பீடத்துக்கான உபசெயலாளராக முகம்மட் அபூவக்கர் றிபாயிஸ் முகம்மட்டும் பொருளாளராக எம்.ஐ.எம்.ஜெஸிலும் நலன்புரி இணைச்செயலாளர் ஆண் முஹம்மது மக்பூல் முகம்மது காமிலும் நலன்புரி இணைச்செயலாளர் பெண் உம்மு பரீதா முஸ்தபாவும் உள்ளக கணக்குப் பரிசோதகராக சீனி முகம்மட் கலீலும் பதிவாளர் பகுதி 1 அப்துல் றசூல் அஸ்லாம் ஸிஹான், பதிவாளர் பகுதி 2 அப்துல் றஹீம் சலாப்தீன், நிதியாளர் பகுதி அகமதுலெப்பை சதக்கத்துல்லாஹ், முகாமைத்துவ, வர்த்தக பீடம் முகம்மதுக் காசீம் அப்துல் கபூர்,கலை,கலாசாரபீடம் ஆதம்பாவா முகம்மட் நிஹாப், 

இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடம் கலந்தார்லெப்பை அப்துல் மஜீத், பிரயோக விஞ்ஞான பீடம் முஹம்மட் தம்பி ஹாஸிர் முஹம்மட், பொறியியல் பீடம் அப்துல் ஜப்பார் முஹம்மது ஹாரிஸ்,தொழில்நுட்ப பீடம் சம்சுதீன் றிபாய்டீன், சாரதிகள் பிரிவு ஜெ.ஏ.நபார், பிரதான நூலகப்பிரிவு பீர் முஹம்மது ஹிதாயத்துல்லாஹ்,பாதுகாப்புப்பிரிவு ஏ.ஆர்.ஹாப்டீன், ஆய்வுகூடப்பிரிவு மீரா முகைதீன் சேகு அகமட், களஞ்சியப்பிரிவு எம்.எஸ்.எம்.பர்ஹான்,பராமரிப்புப்பிரிவு முஹம்மது காசிம் அமீர்,கியரேட்டர் பிரிவு அப்துல் நஸீர் நௌசாத், நலன்புரி, உடற்கல்விப் பிரிவு முஹம்மது ஹனிபா றிஸ்வானுல் ஹக் மற்றும் வெளிவாரி கற்கைகள் பிரிவு எம்.என்.முஸ்னி ஆகியோரும் தெரிவுசெய்யப்பட்டனர்.








எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -