கல்முனையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைவதில் மக்கள் ஆர்வம்




ல்முனைத் தொகுதியின் பல்வேறு பகுதிகளிலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு புதிய அங்கத்தவர்களைச் சேர்க்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இப்பணிகளின் முதற்கட்டமாக மருதமுனை,கல்முனைக்குடி, கல்முனை தமிழ்ப்பிரிவு, சாய்ந்தமருது பிரதேசங்களில் அதிக எண்ணிக்கையானோர் இக்கட்சியில் இணைந்து வருகின்றனர். இவர்களுள் பெரும் எண்ணிக்கையானோர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்காக அர்ப்பணித்துச் செயற்பட்டவர்கள் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்முனைத் தொகுதி அமைப்பாளரும் அமைச்சர் றிஷாத் பதியுதீனின் பாராளுமன்ற விவகார செயலாளருமான ஏ.ஆர்.எம். ஜிப்ரி தெரிவித்தார்.

அண்மையில் கல்முனைக்குடி, சாய்ந்தமருது இளைஞர்கள் பலர் கட்சியில் இணைந்து கொள்ளும் வைபவத்தில் உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் அவர் உரையாற்றுகையில்,

கல்முனைப்பிரதேசம் கடந்த 16 வருடங்களாக பல்வேறு துறைகளிலும் புறக்கணிக்கப்பட்டு வருகின்றது. அபிவிருத்திகள் மந்த கதியில் சென்று கொண்டிருக்கின்றன. காலத்துக்குக் காலம் சில மாயைகள் காட்டப்படுகின்றன. கல்முனை மட்டுமல்ல, எமது அம்பாறை மாவட்டத்திலுள்ள சகல கிராமங்களிலுமுள்ள மக்கள் இப்போது விழிப்படைந்து விட்டார்கள்.

காலத்துக்கும் எமது முனேற்றத்திற்கும் பொருத்தமான, சுறுசுறுப்பான, செயற்றிறன் மிக்க தலைமைத்துவம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிஷாத்பதியுதீன் என்பதை மக்கள் உணர்ந்து விட்டார்கள். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிஷாத் பதியுதீன் ஒரு வினைத்திறன் மிக்க செயற்பாட்டாளர் என்பதை எவருமே மறுக்க முயடியாது.

இவ்வாறு எமது தலைமைத்துவத்தையும் கட்சியையும் பலப்படுத்துவதற்கு இப்போது மக்கள் எம்பக்கம் இணைவதில் பேரார்வம் காட்டி வருகின்றனர். இம்மக்களையும் ஒன்றிணைத்துக் கொண்டு அம்பாறை மாவட்டத்திலும் ஓர் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தி, விட்டுப்போற அபிவிருத்திகள் மற்றும் உரிமைகளை வென்றெடுக்கப் பாடுபடுவோம்.

இந்த நாட்டில் எம் சமூகத்துக்கு பிரச்சினைகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் எல்லாம் தலைகொடுத்து சவால்களை எதிர்கொள்ளும் தலைவர் றிஷாத் பதியுதீன் மீது சில பேரினவாத சக்திகள் எத்தனை தடைகளையும் அச்சுறுத்தல்களையும் விடுத்து வருகின்றனர். எதற்குமே சளைக்காது தான் முன்னெடுத்த காரியங்களை விட்டுக் கொடுக்காமல் இட்டுச் செல்கின்றார்.

எனவே அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முகாமைத்துவ, நிர்வாகக் கட்டமைப்புக்களில் மக்கள் வெறும் பார்வையாளர்களாக இல்லாது பங்காளர்களாக அங்கம் வகிக்கும் செயற்றிட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. இதில் இணைந்து பணியாற்றப் புறப்பட்டிருக்கும் உங்களை நாம் அன்புடன் வரவேற்கின்றோம். நாம் ஒன்றிணைந்து செயற்படுவோம். கடந்த 16 வருட கால ஏமாற்றங்களுக்கு ஒரு முடிவு கட்டுவோம். என்றார்.

இவ்வைபவத்தில் கல்முனை பிரதேச சபையாக இருந்தவேளை அதன் முன்னாள் உறுப்பினராவிருந்த எஸ். ரீ. தர்மகபீரும் கலந்து கொண்டார்.

மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர் ஏ.ஆர்.எம். ஜிப்ரி

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -