அட்டாளைச்சேனை என்பது முஸ்லிம் காங்கிரஸ் கோட்டை. அட்டாளைச்சேனை ஆட்சியாளர் என்ற வகையில் தற்போதய சுகாதார அமைச்சர் நசீர் அவர்கள் அட்டாளைச்சேனை சார்பாக கிழக்கு மாகாண தேர்தலில் முன்னிறுத்தும் அல்லது சிபார்சு செய்யும் வேட்பாளரே வெற்றி பெற முடியும்.
மாறாக இவர் யார் என்னை சிபார்சு செய்ய என்ற ஒரு தலைக்கணம் வருமானால் வெற்றியும் இல்லை வேட்பாளரும் இல்லை என்பதை மாகாண தேர்தலில் அட்டாளைச்சேனையில் இருந்து குதிக்க நினைக்கும் நபர் யாராக இருந்தாலும் சிந்திக்க வேண்டும். மாகாண தேர்தல் நெருங்கும் போது சாதகம் பாதகம் குறித்து நீண்ட கட்டுரை பின்னர் எழுதுவோம் ..
அட்டாளைச்சேனையை பொறுத்த மட்டில் ஒரு அமைதியாக எல்லோரையும் பண்பாக அனுசரித்து கட்சி பேதமின்றி கொண்டு செல்லக்கூடிய ஒரு வேட்பாளராக முன்னாள் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் முனாஸ் பார்க்கப்படுகின்றார்.
அட்டாளைச்சேனையை பொறுத்த மட்டில் முனாஸ்சை அட்டாளைச்சேனை மக்கள் ஒன்றிணைந்து வெற்றியடைய வைத்து அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளராக கொண்டுவர வேண்டிய தேவை ஒன்று தொக்கி நிற்க்கின்றது.
எதிர் வரும் பிரதேச சபை தேர்தல் என்பது பாலமுனை மக்கள் முற்று முழுதாக சட்டத்தரணி அன்சீலை முஸ்லிம் காங்கிரஸ் அல்லாத இன்னுமொரு முஸ்லிம் கட்சி ஊடாக (அந்தக் கட்சி ஜனாதிபதி தரப்பு) அட்டாளைச்சேனை தவிசாளர் பதவியை பெறுவது என்று ஒரு திட்டம் தயார் செய்யப்படுள்ளது. அதாவது முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்றும் மாற்றுக் கட்சி மூலம் அட்டாளைச்சேனை தவிசாளர் பதவியை வென்று விட்டோம் என்று மார்தட்டும் ஒரு சுப்பர் பிளான் உள்ளதாம் .
அதனால் அட்டாளைச்சேனையில் அமைச்சர் நசீர் அவர்கள் வலுவான ஒரு நல்ல வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெற வேண்டிய அவசிய தேவையுள்ளது ..ஏற்கனவே உறுப்பினராக இருந்த முனாஸ் மக்களிடம் நன்கு பரிச்சயமானவர். ஒரு ஊடகக்காரர்.நல்ல பண்பானவர், பணத்தை தவிர அத்தனை தகுதிகளும் முனாசிடம் உள்ளது .பணம் தேவை வருகின்ற போது .நிதி திரட்டியாவது இதில் அட்டாளைச்சேனை தவிசாளராக கொண்டுவரவேண்டிய பாரிய பொறுப்பு எமக்கு உள்ளது.
அதனால் அமைச்சர் நசீர் அவர்கள் அட்டாளைச்சேனை பிரதேச சபை வேட்பாளர் விடயத்தில் யாருக்கும் வாக்குறுதி கொடுக்காமல் .தற்போது தவிசாளர் என்ற பந்தாவில் பவனி வரும் சில்லறைகளை தவிர்த்து முனாசை முன்னிறுத்தி அமைச்சர் நசீர் அவர்களின் அரசியல் இருப்பை பலப்படுத்த வேண்டிய தேவை உள்ளது.
எதிராளிகள் பலமாக உள்ளார்கள்.அதனால் ஒரு நேர் கோட்டில் எமது அமைச்சர் நசீர் அவர்கள் எதிர் வரும் காலங்களில் பெரும் சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் அணி மற்றும் அமைச்சர் ரிசாத் அணி ஆகிய அணிகளை நேரடி மோதலாக சந்திக்க வேண்டியுள்ளது.
அமைச்சர் நசீர் அவர்கள் அட்டாளைச்சேனை பிரதேச ஆட்சியாளர் என்ற வகையில் பிரதேச சபை தவிசாளர் விடயத்தில் மிக அதிக கவனம் செலுத்த வேண்டும்.முனாஸ் தவிசாளர் வேட்பாளராக நிறுத்தப்பட்டால் படித்த மட்டம் தொட்டு பாமரன் வரை வாக்களிக்கும் நிலை உருவாகும் என்பதை எத்தி வைப்போம்.