இந்தியா: முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவை தொடர்ந்து, இளம் அமைச்சர் ஒருவர், அலுவலகத்தை சுத்தப்படுத்திய காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
உத்தரபிரதேச முதல்வராக பதவியேற்ற யோகி ஆதித்யநாத், அமைச்சர்கள் அனைவரும் தூய்மை பணியில் ஈடுபட வேண்டும். இதற்காக வருடத்தில் 100 மணி நேரம் செலவிட வேண்டும் என உத்தரவிட்டார்.
இதனை ஏற்று, அமைச்சராக உள்ள உபேந்திர திவாரி என்பவர், சட்டசபையில் உள்ள தனது அலுவலகத்தையும், நடைபாதைகளையும் துடைப்பத்தால் சுத்தப்படுத்தினார். இதனை பார்த்த அதிகாரி எதையும் செய்ய இயலாமல் அதிர்ச்சியில் உறைந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. (தினமலர்)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -