வட்டவளை லொனக் தோட்ட தொழிலாளர்களின் போராட்டம்




க.கிஷாந்தன்-

ட்டன் வட்டவளை லொனக் தோட்டத்தில் 23.03.2017 அன்று தோட்டத் தொழிலாளர்கள் சுமார் 300ற்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இவர்கள் தமது தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள பாற்பண்ணையின் முகாமைத்துவம் முழு தோட்ட நிர்வாகத்தையும் கையளிக்கவும் தமது ஊழியர் சேமலாப நிதி இலக்கைத்தை மாற்றி புதிய இலக்கங்கள் தருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் அதற்கு தாம் உடன்பட போவதில்லை எனவும் கூறியே இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது வருகை தந்த தோட்ட முகாமையாளர் மற்றம் நோட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் தொழிலாளர்களுடன் பேச்சுவாரத்தை நடாத்தினர்.

அதனை தொடர்ந்து தோட்ட முகாமையாளர் தனது மேலாளர்களின் பணிப்பிற்கமைய இந்த பிரச்சினையை தொழிற் திணைக்களத்திற்கு கொண்டு செல்வதாக அறிவித்ததன் பின்னர் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

எனினும் தொழிலாளர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர். மேலும் பாற்பண்ணை முகாமை தனியாகவும் தேயிலை தோட்ட முகாமை தனியாகவும் நடைபெற வேண்டும் எனவும் போராட்டகாரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -