மூதூர் மத்திய கல்லூரி இல்ல விளையாட்டுப் போட்டி - இக்பால் இல்லம் சம்பியனானது

ஹாசிப் யாஸீன்-
மூதூர் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியின்இறுதிப் போட்டி சனிக்கிழமை (11) பாடசாலை அதிபர் ஏ.எச்.எம்.பஸீர் தலைமையில் பாடசாலைமைதானத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இதில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஜே.எம்.லாஹிர், ஆர்.எம்.அன்வர்,மூதூர் பிரதேச சபையின் செயலாளர் ஏ.டவுள்யு.எம்.ஹில்மி, உடற்கல்விக்கான உதவிக் கல்விப்பணிப்பாளர் ஏ.டவுள்யு.எம். ஜவாத், மூதூர் மின் அத்தியட்சகர் என்.சிவக்குமார் உள்ளிட்ட பலஅதிதிகளும் கலந்து கொண்டனர்.

இக்பால் (நீலம்) இல்லம் 298 புள்ளிகளைப் பெற்று 2017ம் ஆண்டின் சம்பியன் பட்டத்தைபெற்றுக்கொண்டது. ரூமி (சிவப்பு) 286 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தையும், கஸ்ஸாலிஇல்லம் (பச்சை) 283 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டது.

இதன்போது விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸூக்கு பாடசாலை அதிபர்மற்றும் பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -