அரசியல் வாதிகளே! தயவு செய்து இனிமேலாவது கவணம் செலுத்துங்கள்.!

ரசியல் வாதிகளை பொறுத்தவரை, மாற்றுமதங்களையும் மதித்து நடக்கவேண்டிய கடமைப்பாடு இருப்பது உண்மைதான் என்றிருந்தாலும், அதற்காக அவர்களின் ஆச்சாரங்களையோ, வணக்க வழிமுறைகளையோ பின்பற்றவேண்டிய அவசியம் கிடையாது.

அதே போன்று அவர்களும் நடந்து கொள்ளமாட்டார்கள் என்பதே உண்மையாகும். நமது மார்க்கத்தில் வட்டி, மது, மாது ,கொலை போன்ற விடயங்களுடன், ஓர் இறை கொள்கைக்கு மாற்றமாக ஒருவர் நடந்து கொள்ளுவதும், அதேநேரம் இன்னொருவருக்கு குனிந்து வணக்கம் செலுத்துவதும் தவிர்கப்பட வேண்டிய செயலாகவே கருதப்படும்.

இப்படியான செயல்பாடுகளை நமது அரசியல் வாதிகள், மத நல்லிணக்கம் என்ற போர்வையில் மாற்றுமத சகோதரர்களின் சிலைகளுக்கு மாலை அணிவிப்பது, அவர்களுடைய கோயிலுக்குல் சென்று பொட்டு வைத்துக் கொள்வது, வெறும் மேனியோடு நின்று கொண்டு அவர்கள் கடவுளை தரிசிப்பதை போல் நடந்து கொள்வதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத செயல்கள் ஆகும்.

இப்படியான செயல்பாடுகளை செய்யாது விட்டால் தனது உயிருக்கும், உடமைக்கும் ஆபத்து நேரலாம் என்ற நிலையில் ஒருவர் செய்வாரேயானால் அது இறைவனால் மன்னிக்கப்படலாம். அதே நேரம், இந்த செயல்பாடுகள் பூரண சுதந்திரமான நிலையில் ஒருவரினால் செய்யப்படுமாக இருந்தால் அவரின் நிலையை அல்லாஹ்தான் அறிவான்.

அவர்களின் நிகழ்ச்சிகளில் இப்படியான செயல்பாடுகளை நாம் தவிர்ந்து கொள்ள விரும்பினால் மாற்று மத சகோதரர்கள் அதனை தப்பாக நினைக்கப்போவதுமில்லை, அதற்காக அவர்கள் கோபிக்கப் போவதுமில்லை, இப்படியான நிலையில், அதனை தவிர்க்க கூடிய பூரண சுதந்திரம் இருந்தும் தானாகவே முன் சென்று இப்படியான செயல்பாடுகளில் ஈடுபடும் முஸ்லிம் அரசியல் வாதிகளை என்னவென்று கூறுவது.

நமது நிகழ்ச்சிகளுக்கு வரும் சில மாற்று மத சகோதரர்கள் மாமிசம் உண்ண மாட்டார்கள், அது அவர்களின் உயிர் மூச்சான கொள்கை என்று தெறிந்து கொண்டும் நாம் அவர்களுக்கு கறியை சமைத்து சாப்பிடுமாறு கூறப்போவதுமில்லை, அவர்கள் அதனை சாப்பிடப் போவதுமில்லை. கண்ணியம் கருதி அவர்களும் நாமும் நடந்து கொள்வதைப்போல், அவர்களுடைய நிகழ்ச்சிகளில் நாமும் சில விடயங்களை தவிர்ந்து கொள்வது என்பது முக்கியமாக கடைப்பிடிக்க வேண்டிய விடயமாகும்.

எந்த வித கட்டாயப்படுத்தலும் இல்லாத நிலையில், இவர்களாகவே அதனை ஏற்றுக்கொண்டு, அவர்களுடை ஆச்சாரங்களை பின்பற்றுவது என்பது, இவர்களுடைய பிழையான நடவடிக்கையே தவிர, அவர்களின் குற்றம் அல்ல என்பதையும் நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

பல மதங்களை பின்பற்றும் சகோதரர்கள் வேளை செய்யும் நிறுவனங்களில் பணியாற்றும் முஸ்லிம் சகோதரர்கள், முக்கியமான அவர்களின் நிறுவன நிகழ்ச்சிகளில் மது அருந்தும் நிலையேற்பட்டால், அவர்கள் அந்த விடயத்தை தவிர்ந்து கொள்வதினூடாக, இஸ்லாத்தின் மகிமையை அவ்விடத்தில் வெளிச்சம் போட்டு காட்டுவதற்கு அவர்களின் செயல்பாடுகள் உதவி புரிவைதயும் நாம் அறிந்திருக்கின்றோம்.

அதே போன்றுதான் சமூகத்தின் முக்கிய இடம் வகிக்கும் மௌலவிமார், அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் இஸ்லாம் சம்பந்தப்பட்ட பேணுதலான விடயங்களில் தவறு செய்வார்களேயானால், அது முழு முஸ்லிம் சமுதாயத்தையும் பாதிக்கும் என்பது மட்டுமல்ல, இஸ்லாமிய விழுமியங்களை மற்ற சமூதாயத்தை சேர்ந்தவர்கள் தவறாக புரிந்து கொள்வதற்கும், இவர்களுடைய செயல்பாடுகள் காரணமாக அமையலாம் என்பதே உண்மையாகும். ஆகவே, சாக்கடை அரசியலுக்காகவும், பதவியை பாதுகாக்கவும், வாக்குகளை பெறுவதற்காகவும், இஸ்லாமிய விழுமியங்களையும், கொள்கைகளையும் இவர்கள் கேலிக்கூத்தாக ஆக்குவதை மன்னிக்கவே முடியாது.

அரசியல் வாதிகளே...! இனிமேலாவது திருந்தி நடந்து கொள்ளுங்கள், மார்க்கம் என்பது உங்களுடையது மட்டுமல்ல, எங்களுடையதாகவும் இருக்கின்றது, உங்களின் தவறான நடவடிக்கைகள் எங்களையும், எங்களின் புனித மார்க்கத்தின் கொள்கைகளையும் பாதிக்கின்றது என்று கூறிக்கொள்ள விரும்புகின்றோம்... தயவு செய்து இதில் கவணம் செலுத்துங்கள்...!
எம்.எச்.எம்.இப்றாஹிம்,
கல்முனை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -