அளுத்கமையில் 2 மாணவர்களுக்கு எச்.ஐ.வி : பின்னனியில் கலைஞர்

களுத்துறை, அளுத்கம பிரதேச பாடசாலை ஒன்றின் மாணவர்கள் இருவருக்கு எச்.ஐ.வி. தொற்று நோய் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தச் சம்­பவம் தொடர்பில் மேலும் தெரிய வரு­வ­தா­வது, மாண­வர்­க­ளுக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்­பட்­டுள்­ள­தாக கிடைத்த தக­வ­லை­ய­டுத்து, குறித்த இரு மாண­வர்­களைப் பொலிஸார் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தி­யுள்­ளனர். 

இதன்போது தாங்கள் தொடர்பு வைத்­த­தாக மொடலிங் கலைஞர் ஒரு­வரின் பெயரை இவர்கள் வெளி­யிட்­டுள்­ளனர்.இதனையடுத்து, மேற்­கொள்­ளப்­பட்ட விசா­ர­ணையில் மொடலிங் கலைஞர் ஒருவர் கைது செய்­யப்­பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதே­வேளை, குறித்த நபரை சிறைச்­சா­லையில் தனி­யான ஓரி­டத்தில் தடுத்து வைப்­ப­தற்­கான ஏற்­பா­டு­களை சிறைச்­சாலை வட்­டா­ரங்கள் மேற்­கொண்­டி­ருந்­தன.பொலி­ஸாரால் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்த இரு மாண­வர்­களின் பெற்­றோர்­களும் வெளி­நா­டு­களில் தொழில் செய்­வ­தா­கவும் உறவுமுறை பெண் ஒரு­வ­ரு­ட­னேயே இவர்கள் வாழ்ந்து வரு­வ­தா­கவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -