ஜுனைட்.எம்.பஹ்த்-
காத்தான்குடி ஸாலிஹ் அல் குர் ஆன் மத்ரஸாவில் அல் குர் ஆன் கற்று வெளியாகும் மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கும் 25 ஆவது வருட மாபெரும் விழாவும் மலர் வெளியீட்டு நிகழ்வும் இன்ஷா அல்லாஹ் 31.03.2017 வெள்ளிக்கிழமை பி.ப 03.00 மணிக்கு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் ஸாலிஹ் அல் குர் ஆன் மத்ரஸாவின் அதிபர் ஜனாப் M.S.M.அஸார் மெளலவியின் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இம் மாபெரும் நிகழ்வில் மாணவர்களது நிகழ்வுகள், அல் குர் ஆன் பற்றிய அறிஞர்களது உரைகள், இம் மத்ரஸாவில் கற்று உயர் நிலை அடைந்த மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு, பெரியார்களுக்கு அதி உயர் விருது வழங்கி கெளரவிக்கும் நிகழ்வு. அத்துடன் இம் மத்ரஸாவில் 25 வருடத்தில் அல் குர் ஆன் கற்று வெளியாகிய 1619 மாணவர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய மலர் வெளியிடும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது..
இந் நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அழைக்கிறார்கள்.
அதிபர்,நிர்வாகம்,
ஸாலிஹ் அல் குர் ஆன் மத்ரஸா,
காத்தான்குடி.