மருதமுனை றிபாஸ் எழுதிய இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா..!

பி.எம்.எம்.ஏ.காதர்-
ருதமுனை ஏ.எல்.எம்.றிபாஸ் எழதிய 'விலைப்பட்டியல் கொலைப்பட்டியல், மு.கா தேசியப்பட்டியல், 7வது ஜனாதிபத்தேர்தலும் முஸ்லிம் அரசியலும் என்ற இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா சனிக்கிழமை (01-04-2017) மருதமுனை கலாச்சார மத்திய நிலைய மண்டபத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளர் கலாநிதி சத்தார் எம.பிர்தௌஸ் தலைமையில் நடைபெறவுள்ளது.

சிரேஷ்ட சட்டத்தரணிகளான எம்.எஸ்.எம்.ஜெமீல், ஏ.எம்.பதுறுத்தீன் ஆகியோர் முன்னிலையில் பிரதம அதிதியாக தேசிய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா கலந்து கொள்கின்றார். இந்த நூல்கள்; பற்றி ஆசிரியர் பி.எம்.சிபான், சட்டத்தரணிகளான எம்.சி.சபருள்ளா, எம்.எம்.பஹீஜ், விரிவுரையாளர் சிறாஜ் மஸ்ஹூர் ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.

நூலின் பிரதிகளை வர்த்தகர் எம்.ஐ.ஏ.பரீட், ஆசியா மன்றத்தின் நிகழ்ச்சித்திட்ட ஆலோசகர் எம்.ஐ.எம்.வலீத், விமர்சகர் எம்.எச்.எம்.இப்றாஹீம் ஆகியோர் பெறவுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -