க.கிஷாந்தன்-
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் – மஸ்கெலியா பிரதான வீதியில் குடா மஸ்கெலியா பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று 25.03.2017 அன்று இரவு 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணஞ் செய்த 03 பேர் படுங்காயங்களுக்குள்ளாகி மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குடா மஸ்கெலியா பகுதியிலிருந்து மஸ்கெலியா நகர பகுதியை நோக்கி சென்றுக் கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் 15 மற்றும் 14 வயதுடைய சிறுவர்களே காயமடைந்துள்ளனர். முச்சக்கரவண்டியின் சாரதி 15 வயதுடைய சிறுவர் என்பதால் அவருக்கு சாரதி அனுமதி பத்திரம் இல்லை என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
முச்சக்கரவண்டியில் தடுப்புக் கட்டை செயலிழந்ததன் காரணமாகவே இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாகவும், இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.