தேசிய ஒற்றுமையுடன் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவோம் - அமைச்சர் பைஸர் முஸ்தபா

லங்கையின் 69 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் நல்லாசியை வேண்டிக்கொள்வதோடு,இந்த சுதந்திர தினத்தை சகல இனங்களுக்கு இடையிலும் தேசிய ஒற்றுமை என்ற ரீதியில் புரிந்துணர்வுடனும் பரஸ்பர நல்லெண்ணங்களுடனும் பயன்படுத்துமாறு வேண்டிக் கொள்கின்றேன் என, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா, இலங்கையின் 69 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளளார்.

அந்த வாழ்த்துச் செய்தியில் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இயங்கும் நல்லாட்சியி;ல் சுதந்திர தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இலங்கைப் பிரஜைகளாகிய நாம், நமது தேசப்பற்றை வெளிப்படுத்துவதற்கான நாளாக இந்த சுதந்திர தினத்தைப் பயன்படுத்திக்கொள்ள முன்வர வேண்டும். நமது முஸ்லிம் சமூகமும் இந்த தேசப்பற்றை உணர்ந்து செயற்பட வேண்டும். சுதந்திர தினத்தைப் பெற்றெடுப்பதில் நமது முஸ்லிம் சமூகம் பாரிய பங்களிப்புக்களைச் செய்துள்ளது என்பதை யாரும் மறந்து விட முடியாது. நமது சமய, சமூக மற்றும் அரசியல் தலைமைகள் அன்று முதல் இன்று வரை நாட்டுப்பற்றோடு செயற்பட்டு வந்துள்ளது என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும். இந்த பின்னணியில் இன்றும் கூட நமது முஸ்லிம் சமூகம் நாட்டுப்பற்றோடு தேசிய உணர்வோடும் செயற்பட்டு வருகின்றனர்.

இதே வேளை, எமது நாட்டு முஸ்லிம்;கள் ஒருபோதும் பிரிவினைவாத செயற்பாடுகளிலோ சமய நிந்தனைகளிலோ அல்லது சமய சச்சரவுகளிலோ ஈடுபடாதவர்கள் என்ற உண்மைகளை வெளிப்படுத்தும் ஓர் அரிய உயர்ந்த சந்தர்ப்பமாக இவ்வருட சுதந்திர தினத்தை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதும் என்னுடைய கருத்தாகும். இன்றைய சுதந்திர தினத்தில் எமது சகோதர மக்களையும் ஒன்றரக் கலந்து தேசிய உணர்வுகளோடு அவர்களுடன் பொது வேலைத் திட்டங்கள் போன்றவற்றில் நாம் ஈடுபடுவது சாலச் சிறந்த விடயமாகும். இவ்வாறு அவர்களை இணைத்துக் கொள்வது சமூக சக வாழ்வுக்கு வழி வகுக்கும் என்பது எனது கருத்தாகும்.

இன்று ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் தலைமையில் நாட்டில் பாரிய அபிவிருத்திப் பணிகள் இடம் பெற்று வருவதை நாம் கண்கூடாகக் காண்கின்றோம் இது நமக்குக் கிடைத்துள்ள மற்றுமொரு வரப்பிரசாதமாகக் கருத முடியும். எங்களுக்கு இருக்கின்ற பிரதான பலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இரு கட்சிகளையும் இணைத்து, தேசிய அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்தியதாகும். இது எமக்கு இன்றைய சுதந்திர தினத்தில் மற்றுமொரு பெரும் சக்தியாகும். எனவே, மேற்படி சகல விடயங்களையும் கருத்திற்கொண்டு இவ்வருட சுதந்திர தினத்தை முஸ்லிம்கள் அனைவரும், ஏனைய சமூகங்களுடன் இணைந்து, தேசிய ஒற்றுமையுடனும் நல்லிணக்கத்துடனும் கொண்டாட வேண்டும் என, அமைச்சர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -