தாறுஸ்ஸலாம் மர்மங்கள் புத்தக வெளியீட்டில் அக்கரைப்பற்று அரசியல்வாதி ஒருவருக்கும் தொடர்பு -திடுக்கிடும் தகவல்

தாறுஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்கள் என்னும் புத்தகம் முகவரியற்று வெளியாகியிருக்கும் இவ்வேளை ஏராளமானவர்களின் கைகளில் கிடைத்துள்ளதாகவும், சிலருக்கு தபாலிலும் சிலருக்கு நேரடியாக தனிநபர்களாலும் வழங்கப்பட்டுள்ளன.

குறித்த புத்தகத்தில் பொய்யான விடயங்கள் எழுதப்பட்டுள்ளதாகவும் தகவல்களை சரியாகப் பெற்றுக்கொள்ளாது கேள்விப்பட்ட விடயங்களையே புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதனாலும் புத்தகத்தை இதுவரை யாரும் உரிமை கோரவில்லை என்பதனால் அதுசம்மந்தமாக விசாரணை நடைபெறுகிறது.

இன்று காலை குறித்த சர்ச்சைக்குரிய புத்தகத்தினை அச்சிட்டுக் கொடுத்தார்கள் என்ற சந்தேகத்தில் கொழும்பு மருதானையில் ஒரு அச்சகத்தில் குற்றப்புலனாய்வுத்துறையினர் சுற்றிவழைத்து விசாரனை மேற்கொண்டனர்.

குறித்த விசாரணையில் பாரிய மாற்றங்களும் அதிர்ச்சித் தகவல்களும் வெளியாகியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இப்புத்தகத்தை வெளியிடுவதற்கு அக்கரைப்பற்றினைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதியும் பக்கபலமாக செயற்பட்டுள்ளார் என்றும் தெரியவந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 மேலதிக விபரம் விரைவில் ...
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -