மசாஜ் நிலையம் சென்ற பொலிஸ் அதிகாரிக்கு வந்த சோதனை.. !

சாஜ் நிலையம் எனும் பெயரில் இயங்கும் விப­சார விடு­தி­களை பொலிஸார் சுற்­றி­வ­ளைக்கும் நட­வ­டிக்­கை­க­ளி­டையே, பலவந்த­மாக உடற்பிடிப்பு நிலை­யத்தில் (மசாஜ் நிலையம்) உடற்­பி­டிப்பு செய்­து­கொண்ட புத்­தளம் பொலிஸ் பிராந்­தி­யத்தில் சேவை­யாற்றும் உயர் பொலிஸ் அதி­காரி ஒரு­வவர் கைது செய்யப்பட்டு கடும் நிபந்­த­னை­களின் அடிப்­ப­டையில் பிணையில் செல்ல நீர்­கொ­ழும்பு நீதிவான் நீதி­மன்றம் அனுமதியளித்தது. 

நீர்­கொ­ழும்பு பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்டு ஏற்­க­னவே விளக்­க­ம­றி­யலில் இருந்த நிலை­யி­லேயே அவ­ருக்கு நீர்­கொ­ழும்பு நீதிவான் ருச்­சிர வெலி­வத்த கடும் நிபந்­த­னையில் பிணை­ய­ளித்­துள்ளார்.

இந்த சம்­பவம் குறித்து மேலும் தெரியவ­தா­வது,

புத்­தளம் பொலிஸ் பிராந்­தி­யத்தில் உயர் பத­வியில் சேவை­யாற்றும் பொலிஸ் பரி­சோ­தகர் தர அதி­கா­ரி­யான மேற்­படி சந்­தேக நபர் நீர்­கொ­ழும்பில் உள்ள மசாஜ் நிலையம் ஒன்­றுக்கு சென்று அங்கு பணம் செலுத்­தாது பலாத்­கா­ர­மாக மசாஜ் செய்­து­கொண்டு வந்­துள்ளார். 

இந் நிலை­யி­லேயே அது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்­பாட்­டுக்கு அமை­வாக அவரை பொலிஸார் கைது செய்து நீதி­மன்றில் ஆஜர் செய்­தி­ருந்த நிலையில் அவர் சில நாட்கள் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருந்தார். 

இந் நிலையில் வழக்­கா­னது மீள விசா­ர­ணைக்கு வந்தபோது, சந்­தேக நப­ரான பொலிஸ் அதி­காரி எத்­தனை முறை இவ்­வாறு பலாத்­கா­ர­மாக இவ்­வாறு மசாஜ் செய்து கொண்டார். என நீதிவான் ருச்­சிர வெலி­வத்த பொலி­ஸா­ரிடம் கேள்வி எழுப்­பினார். இதன்போது வழக்கை நெறிப்­ப­டுத்­திய நீர்­கொ­ழும்பு பொலிஸ் நிலை­யத்தின் சார்ஜன்ட், சந்­தேக நபர் 5 முறை இவ்­வாறு பலாத்­கா­ர­மாக மசாஜ் ­செய்­து­ கொண்­டுள்­ள­தாக குறிப்­பிட்டார்.

இந் நிலையில் பொலிஸ் அதி­கா­ரியை கடு­மை­யாக எச்­ச­ரித்த நீதிவான் அவரை இரு சரீரப்பிணைகளில் விடுவித்ததுடன் சாட்சியாளர்களுக்கு ஏதேனும் ஒரு விதத்தில் அச்சுறுத்தல் விடுத்தால் பிணையை ரத்துச் செய்வதாக எச்சரித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -