முதலமைச்சர் செய்யும் சேவையினை சுபைரால் தாங்க முடியவில்லை - ராசிக் காட்டம்

கில இலங்கை ஜமிய்யதுல் உலமா முஸ்லிம் சமூகத்துக்கு செய்யும் அர்ப்பணிப்பை விட பொதுபலசேனாவின் ஞானசாரதேர்ரின் சேவை பாராட்டத்தக்கது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சுபைர் கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என ஏறாவூர் நகர சபையின் முன்னாள் உறுப்பினர் எம். ஹுசனார் ராசிக்  தெரிவித்துள்ளார்.

தமக்குள்ள அரசியல் காழ்ப்புணர்வில் தாம் எதைப் பேசுகின்றோம் என்று கூடத் தெரியாமல் சுபைரின் கருத்துக்கள் அமைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏறாவூரில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஏறாவூர் நகர சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.ஹுசனார் ராசிக் இவ்வாறு தெரிவித்தார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அவர்கள் மட்டக்களப்பு மக்களின் காணி உரிமைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லையானால் அண்மையில் ஏறாவூருக்கு ஜனாதிபதி வந்தபோது வழங்கப்பட்ட ஆயிரத்து 1762 பேருக்கான காணி உறுதிப்பத்திரங்களை யார் வழங்கியது 962பேருக்கான புதிய வீடுகள் யாரால் வழங்கப்பட்டன. ஆகவே மக்களும் தன்னைப்போல் முட்டாளாக இருப்பார்கள் என சுபைர் எண்ணுவது வேடிக்கையாக உள்ளது.

ஏறாவூர் மண்ணில் 20 கோடி ரூபாபெறுமதியிலான பொதுச் சந்தை , கலாசார மண்டபம் ,ஏறாவூர்வைத்தியசாலைக்கு பலகோடி ரூபா பெறுமதியினாலான உதவிகள் ,மிக அண்மையில் ஏறாவூர் அலிகார் மைதானத்தை புனரமைக்க 14கோடி ரூபா ஒதுக்கீடுசெய்ய ஜனாதிபதி முன்வந்தமை உட்பட அனைத்து விடயங்களையும் வெகு விரைவில் நாம் புத்தகமாகவே தொகுத்து சுபைரின் கரங்களில் வழங்குவதற்கு நாம் நடவடிக்கயெடுக்கவுள்ளோம்.

கல்வியியற் கல்லூரி மாணவர்கள் பரிதவித்து செய்வதறியாது நின்றபோது அவர்களுக்காக தனித்து நின்றுபோராடியாது தான் முதலமைச்சரின் இழிநிலை அரசியல் என்றால் அவற்றையெல்லாம் வேடிக்கைப் பார்த்துக்கொண்டு கைகட்டி நிற்பது தான் உயர்ந்த அரசியல் என்றா சுபைர் கூறுகின்றார்.

சுபைர் பஷீர்சேகுதாவூத் வித்தியலாயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே இவ்வாறான உரையொன்றை நிகழ்த்தியுள்ளார், அவர் அந்த பாடசாலைக்கு 20 ஆயிரம்பெறுமதியான உதவிகளைசெய்திருக்கலாம் ஆனால் முதலமைச்சர் பஷீர்சேகுதாவூத் வித்தியாலயத்திற்கு 20 இலட்ச ரூபாவுக்கு அதிக அபிவிருத்திகளையும்பெற்றுக்கொடுத்துள்ளார் என்பதை சுபைர் அறியாமல் இருக்க வாய்ப்பில்லை அத்துடன் யாராலும் மறுக்கவும் முடியாது .

அவற்றயெல்லாம் பட்டியலிட்டு காட்டுவது நாகரிகமற்றது என்பதால் நாம்மௌனமாக இருக்கின்றோம் என்பதுடன்தேவயென்றால் அவற்றையும் சகல தரவுகளுடனும் நிரூபிக்க நாம் தயார் என்பதை சுபைர் புரிந்துகொள்ளவேண்டும்.

இந்த ஹாபிஸ் நசீர் முதலமைச்சரின் ஆட்சிக் காலத்தில் தான் தாம் சுதந்திரமாகசெயலாற்ற முடிவதாக அதிகாரிகள் பேசுவதை தாமே பல தடவை கேட்டுள்ளதாக ஏறாவூர் நகர சபை உறுப்பினர் குறிப்பிட்டார்,

மக்களுக்கு எவ்வாறு அபிவிருத்திகளைபெற்றுக் கொடுக்கலாம் என்று எண்ணி அதனைபெற்றுக்கொடுப்பவரே கிழக்கு மாகாண முதலமைச்சர் அன்றி சுபைர் சுகாதார அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித் தருவதாக கூறி இரண்டு இலட்சம் பணம் வாங்கியதைப் போன்ற கீழ்த்தரமானவேலைகளை முதலமைச்சர் செய்யவில்லை, செய்யவும் மாட்டார். ஆனால் கிரான்பகுதி இந்து மதகுரு ஒருவரை சுபைரின் இணைப்பாளர் என்று நியமித்து அவர் மூலம் வேலைக்கமர்த்த பெற்ற 30 இலட்சத்துக்கு மேலான பணங்களை இன்னும் திருப்பிக் கொடுக்க முடியாமல் இருக்கும் சுபைரால் தற் கொலைக்கு முனைந்த குருக்கள் இன்று முதலமைச்சரிடம் வந்து மண்டியிட்டு பணத்தைப் பெற்றுத்தருமாரு கேட்டுக்கொண்டிருக்கிறார். என்பதை மக்கள் புரிந்துகொள்ளவேண்டுமென அவர் கூறினார்.

பிள்ளையான் முதலமைச்சராக இருந்தபோது செய்த கொலை கொள்ளை கடத்தல் போன்றவற்றை தற்போதைய முதலமைச்சர்செய்யவில்லை என்பதன் ஊடாக பிள்ளையான் தமது ஆட்சிக் காலத்தில் செய்ததைக் கூட இந்த முதலமைச்சர் செய்யவில்லை என்ற கூற்றினூடாக சுபைரே ஏற்றுக்கொண்டுள்ளார் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் நல்லவைகளை மட்டுமே செய்வார் என்பது மிகத்தெ ளிவாகதெரிகின்றது.

ஆகவே எந்த பணியுமே செய்யாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பவர்களுக்கு மற்றவர்செய்யும் அபிவிருத்திகளை பார்த்துபொறாமை வருவது இயல்பு எனவும் அதற்காக கீழ்த்தரமான அபாண்டங்களை சுமத்துவது நாகரிகமற்றது எனவும் சுபைரின் அரசியல் இறுதிக் காலத்திலாவது நல்லவற்றை கொஞ்சமேனும் செய்யுமாறு ஏறாவூர் நகர சபையின் முன்னாள் உறுப்பினர் எம். ஹுசனார் ராசிக் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -