ஓட்டமாவடி மர்கஸ் அந்நூரின் சாதனையாளர்கள் கௌரவிப்பு விழா.



எச்.எம்.எம்.பர்ஸான்-

ட்டமாவடி-நாவலடி மர்கஸ் அந்நூர் அரபுக்கலாபீடத்தில் இம்முறை பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான மாணவர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று 10.02.2017ம் திகதி மர்கஸ் அந்நூர் கலாபீட கேட்போர் கூடத்தில் மிகவும் சிறப்பான முறையில் கலாபீடத்தின் தலைவரும் வாழைச்சேனை மத்தி பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தருமான அஷ்ஷெய்க் ஏ.எல். பீர்முகம்மது காஸிமி அவர்களின் வழிகாட்டலில் கலாபீட அதிபர் அஷ்ஷெய்க் ஏ.ஹபீப் காஸிமி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஜமாஅது அன்சாரிஸ் ஸுன்னதில் முஹம்மதிய்யாவின் பொதுத்தலைவர் அஷ்ஷெய்க் என்.பீ.எம். முஹம்மது அபூபக்கர் சித்தீக் மதனி அவர்கள் கலந்து கொண்டதோடு, ஏனைய அதிதிகளாக மீராவோடை உம்மு சுலைம் மகளிர் அரபுக்கல்லூரியின் தலைவர் சட்டத்தரணி எம்.எம்.ராஸிக் ((B.A, LLB), வாழைச்சேனை மத்தி பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ், ஓட்டமாவடி கோட்டக் கல்விப்பணிப்பாளர் எம்.எல்.ஏ.ஜுனைத் மற்றும் தாருஸ்ஸலாம் கலாபீட அதிபர் அஷ்ஷெய்க் எம்.பீ.எம். இஸ்மாயில் மதனி, ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலய அதிபர் எம்.ஏ.சாபீர், வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய அதிபர் எம்.ரீ.எம். பரீட், ஸ்டைலிஸ் ஆடையக உரிமையாளர் ஏ.எல்.எம்.றிஸ்வி உட்பட பெற்றோர்கள், நலன்விரும்பிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -