நுவரெலியா சில்மியாபுர பிரதேசத்துக்கு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் நேற்று 24.02.2017 வெள்ளிக்கிழமை விஜயம் செய்தார்.
இதன் போது சில்மியாபுர ஜும்ஆ பள்ளிவாயலுக்கு விஜயம் செய்து ஜும்ஆவுடைய தொழுகையில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்கள், ஜும்ஆவின் பின்னர் சில்மியாபுர பிரதேச சபை உறுப்பினர், பாடசாலை அதிபர், வலயக் கல்வி பணிப்பாளர், பிரதேச முக்கியஸ்தர்கள், உலமாக்களுடன் கலந்துரையாடல் ஒன்றையும் மேற்கொண்டிருந்தார்.
இதன் போது அப்பிரதேச மக்களுடைய கல்வி, பள்ளிவாயல் உட்பட பல்வேறு பட்ட பிரச்சனைகளைப் பற்றி கேட்டறிந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் அவர்கள், சில்மியாபுர ஜும்ஆ பள்ளிவாயலை புனரமைப்பு செய்வதற்காக ஹிரா பெளண்டேசன் நிதி ஒதுக்கீட்டில் சுமார் 10 இலட்சம் ரூபா நிதியினை வழங்கிவைத்தார்.
இக்கலந்துரையாடலில் நுவரெலியா சில்மியாபுர பிரதேச முக்கியஸ்தர்கள், உலமாக்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச பாடசாலை அதிபர் மற்றும் வலயக் கல்வி பணிப்பாளர் உட்பட வெலிமடை பிரதேச சபை உறுப்பினர் இல்யாஸ் அவர்களும் கலந்து கொண்டார்கள்.
ஹம்ஸா கலீல்.

