நீங்கள் 20 அல்லது 25 வயதில் உங்கள் பிள்ளைகளை இழக்கத் தயாரா? அமீர் அலி

எச்.எம்.எம்.பர்ஸான்-
ற்போதைய சூழலில் போதை வஸ்து பாவனையை அதிகம் அதிகம் பாவிக்கக் கூடியவர்களாக நம் இளைய சமூகத்தினர் ஆளாகியுள்ளனர் இந்த விடயமானது நம்மத்தியில் மிகக் கவலை தரும் விடயமாகவுள்ளது. என்று பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ் அமீர் அலி நேற்று 17ம் திகதி மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலய மண்டபத்தில் கல்குடா கராத்தே விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.

தொடர்ந்தும் அமைச்சர் பேசுகையில்;

போதை வஸ்து பாவனைக்கு அடிமையாகியுள்ள இளைஞர்களின் உடல் நிலை மிகவும் மோசமாகவுள்ளது 20 அல்லது 25 வயதில் போதைப் பாவனையால் சிறுநீரக நோய், இன்னும் பல நோய் தாக்கங்களுக்கு உள்ளாகி உயிர்களை இழக்கின்ற நிலைக்கு உட்படுகின்றார்கள். இது தொடர்பில் பெற்றோர் தங்களில் பிள்ளைகளின் விடயங்களில் மிகக் கவனம் செலுத்த வேண்டும் இல்லையென்றால் போதை தாக்கத்தால் இள வயதில் மரணத்தை அடைவதை தடுக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

போதைப் பாவனைக்கு அடிமையாகிவுள்ள உங்கள் பிள்ளைகளை நீங்கள் மாற்றியமைத்து சமூகத்தின் நல்ல பிரஜைகளாக ஆக்க வேண்டும் என்றால் அவர்களை பொலிஸாரிடம் ஒப்டையுங்கள் பொலிஸார் அவர்களை சிறையில் அடைத்து தண்டனை வழங்க மாட்டார்கள் மாறாக அவர்களை சிறுவர் நன்னடத்தை பாடசாலைகளுக்கு அனுப்பி அவர்களுக்கு அங்கு கல்வி போதிக்கப் பட்டு அவர்கள் மாற்றியமைக்கப் படுவார்கள். இந்த விடயத்தில் பெற்றோர் கட்டாயம் முன்வர வேண்டும் என தெரிவித்தார்.

இலங்கையில் உள்ள பெரும் பெரும் முக்கியஸ்தர்கள் கூட போதை பாவனைகளுக்கு அடிமையான அவர்களுடைய பிள்ளைகளை இவ்வாறு சீர்திருத்தப் பாடசாலைகளுக்கு ஒப்படைத்து உள்ளார்கள். இது விடயத்தில் அரசாங்கமும் முழுக் கவனம் செலுத்தி வருகிறது எனவும் தெரிவித்தார்.

இன் நிகழ்வில் பொலிஸ் அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.⁠⁠⁠⁠
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -