ஒலுவில் மக்கள் பிரதியமைச்சர் பைசால் காசிமை சந்திப்பு.!

உமர் அலி-
லுவில் நாலாம் பிரிவினைச்சேர்ந்த முப்பதுக்கும் அதிகமான பெண்கள் இன்று காலை சுகாதார போசாக்கு பிரதி அமைச்சர் பைசால்காசீம் அவர்களை நிந்தவூரில் உள்ள அவரது பிராந்திய காரியாயத்தில் இன்று சந்தித்தனர்.

இதுவரை காலமும் பன் உற்பத்தி மூலம் ஜீவனோபாயம் செய்துவந்த தமது ஜீவனோபாயம் கடலரிப்பின் தீவிரத்தினால் கேள்விக்குறியாகியுள்ளதாகவும், எதிர் காலத்தில் பன் உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தமது வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்வதற்காக ஏதாவது மாற்று ஜீவனோபாய முறை ஒன்றினை அமைத்துத்தருமாறு இம்மக்கள் பிரதியமைச்சரிடம் விண்ணப்பம் செய்தனர்.

இவர்காது முறையீட்டினை நன்கு செவிமடுத்த பிரதியமைச்சர் கைத்தறி துறையில் பயிற்சி வழங்கி, அதனைத்தொடர்ந்து அத்தொழிலை தனியாட்களுக்கும் குழுக்களுக்கும் முன்னெடுத்துச்செல்ல தான் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இது சம்மந்தமாக அட்டாளைச்சேனை பிரதேச செயாலளருடன் உடனடியாக தொடர்புகொண்டு எதிர்காத்தில் இத்திட்டம் சம்மந்தமாக மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் ஆலோசனை வாங்கினார்.

நிந்தவூரில் உள்ள பிராந்திய காரியாலயத்தில் இன்று வியாழன் 12 ஆம் திகதி மாதாந்த மக்கள் சந்திப்பு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -