மௌலவி ஆசிரியர் நியமனம் வழங்கள்ஏ.எஸ்.எம்.தாணீஸ்-

டந்த 2008 ஆம் ஆண்டு இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட மெளலவி ஆசிரியர் பரீட்சைக்குத் தோற்றிய அனைவருக்கும் மௌலவி ஆசிரியர் நியமனம் வழங்க வேண்டுமென இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் தலைவர் அல்ஹாஜ். எம்.ஏ. அனஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வர்த்தமாணி அறிவித்தலின் படி இரு பாடங்களிலும் 40- 40 புள்ளிகள் பெறப்படல் வேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்தும் பரீட்சை எழுதிய சகலருக்கும் நியமனம் வழங்குமாறு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பாட்டார்.

காத்தான்குடி தஜ்வீதுல் குர்ஆன் பயிற்சிக் கலாசாலையில் சமீபத்தில் நடைபெற்ற மெளலவி ஆசிரியர்கள் பரீட்சைக்கு தோற்றிய உலமாக்களை சந்தித்த வேளை அவர்களுக்கான மெளலவி ஆசிரியர் நியமனத்திற்கான கிழக்கு மாகாண அமைப்பு ஒன்றினை உருவாக்கி வைத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதுவரை நியமனம் கிடைக்கப்பெறாத மெளலவிமார்களுக்கு நியமனம் கிடைப்பதற்கான அணைத்துவிதமான முன்னெடுப்புக்களையும் மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்ட அவர் இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் அதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

நாடு தழுவிய ரீதியில் இச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டாலும் முதற்கட்டமாக கிழக்கு மாகாணத்தில் செயற்பாட்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களோடு பரீட்சைக்குத் தோற்றிய மௌலவிமார்கள் தொடர்புகளை மேற்கொள்ளுமாறும் கேட்கப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்கள் தழுவிய பதவி வழி உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
தலைவர். மெளலவி.ஏ.சீ.எச்.எம்.பெளசுல் அமீன்(மட்டக்களப்பு), செயலாளர்.மெளலவி. எம். எஸ். நழீம் ஹாமி (அம்பாறை), பொருளாளர்.ஏ.பி.எப்.சன்வா (திருகோணமலை), அத்துடன் மூன்று பெண் மெளலவிய்யாக்கள் பெண்கள் சார்பாக நிருவாகத்தில் இணைக்கப்பட்டனர்.

அதேவேளை பாராளுமன்றத்திலும்,மாகாண சபையிலும் மக்கள் பிரதிநிதிகளை இவ்விடயம் தொடர்பாக பேசுமாறும் மேலும் அவர் குறிப்பிட்டார்.

மிக விரைவில் பாராளமன்றம் கூட இருப்பதால் முடிந்த அளவு உங்களுக்கு தெரிந்த பாராளமன்ற உறுப்பினர்கள் அல்லது அவர்களுடன் நெருக்கமானவர்களை சந்தித்து எமது பிரச்சனைகளையும் பேசுமாறு அகில இலங்கை முஸ்லிம் ஆசிரிய சங்கத் தலைவர் கௌரவ . அனைவரையும் கேட்டுக்கொண்டார்

இன்ஸா அல்லாஹ் எதிர்வரும் 14.01.2017 அதாவது நாளை சனிக்கிழமை கிழக்கு மாகாண ஆழுனர் கௌரவ அல்ஹாஜ் அகமட் ஹாபிஸ் நஷீர் உட்பட இன்னும் பல முக்கியஸ்த்தர்கள் கலந்து கொள்ளும் நிகழ்வொன்று கல்முனை மத்தியமுகாம் கொளனியில் இடம்பெற இருப்பதாக அறியக்கிடைத்துள்ளது. எனவே முடிந்தவர்கள் அவர்களை சந்தித்து மௌலவி ஆசிரிய நியமனம் தொடர்பாக பேசுமாறு அன்பாய் கேட்டுக்கொள்கின்றோம்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -