பல இனவாதிகளை தன் வாத திறமையினால் வீழ்த்திய அமைச்சருக்கு தன் கட்சியின் செயலாளரை வீழ்த்த முடியாதா ஏன் இந்த தயக்கம் ?

ல இனவாதிகளை தன் வாதத் திறமையினால் வீழ்த்திய அமைச்சருக்கு தன் கட்சியின் செயலாளரை வீழ்த்த முடியாதா..? ஏன் இந்த தயக்கம். 

உண்மையில் அமைச்சர் ரிசாட் பதுறுதீன் சிறந்த பேச்சாளர் காரணம் பல இனவாத தேரர்களோடு அவர்களின் சிங்கள தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் பங்குபற்றி சிங்கள மொழியில் விவாதம் செய்தவர் அதற்க்கு சிறந்த உதாரணம் - ஆனந்த தேரர் மற்றும் சில தேரர்களுடன் தொலைக்காட்சி விவாதங்களில் ஈடுபட்டு அவர்களுக்கு சிறந்த விளக்கமும் ஆதாரமும் கொடுத்தீட்கள் வரவேற்கின்றேன்.

 அத்துடன் இனவாதிகளுடன் விவாதங்களுக்கு போக வேண்டாம் என்று பலர் பலவிதாமகச் சொல்லியும் இல்லை என்னால் முடியும் என்ற தைரியத்துடன் சென்று பதில் கொடுத்தீர்கள். காரணம் உங்களில் சுத்தம் இருந்தது என நினைக்கின்றேன்.

ஆனால் எந்த அசுத்தத்தையும் தன்னால் வீழ்த்த முடியும் என்ற உங்களின் நம்பிக்கையை வரவேற்கின்றேன். இப்போது விடயத்துக்கு வருகின்றேன் அமைச்சரே ! சிங்கள மொழியில் பூரண தேர்ச்சி இல்லாத நீங்கள் இனவாத ஆனந்த தேரோவுடன் விவாதம் செய்ய முடியும் என்றால் தமிழ் மொழியில் பூரண தேர்ச்சி பெற்ற உங்களால் ஏன் உங்கள் கட்சி முன்னாள் செயலாளர் நாயகம் ஹமீட்வுடன் விவாதம் செய்ய முடியாது ? 

தலைவர் இனவாத நிகழ்ச்சியில் பங்குகொள்ளமாட்டார் ரங்கா இனவாதி என்று உங்களின் போராளிகள் சொல்கின்றார்கள் சரி ஏற்றுக்கொள்கின்றேன்.

 ஆனந்த தேரோவுடன் ஒப்பிட்டு பாருங்கள் அவரை விட இவர் இனவாதியா ? ஒரு சில காலத்துக்கு முன் மின்னல் நிகழ்ச்சியில் பட்டாணி ராசீக் கொலை விடயத்தை பல தடவை மின்னல் நிகழ்ச்சியில் போட்டார் வெறுக்கின்றேன் உங்கள் பெயரை களங்கப் படுத்தினார் அனைத்தையும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே நான் அதை நம்பவில்லை ஆனால் உங்கள் பெயரை களங்கப் படுத்திய ,தனியார் தொலைக் காட்சி நிகழ்சித் தயாரிப்பாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை ? எதிலும் ஈடுபடாத உங்களுக்கு ஏன் பயம் ? 

தன் பெயரை களங்கப் படுத்திய இனவாத ஆனந்த தேரோவுடன் இரவு முழுக்க விவாதத்தில் கலந்து கொண்ட அமைச்சர் நீங்கள் சின்ன இனவாதி ரங்காவுடன் ஏன் விவாதத்தில் ஈடுபட்டு தான் சுற்றவாளி என மக்கள் முன்னிலையில் நிரூபிக்க முடியாது ? YLS ஹமீட் பல குற்றசாற்றுக்களை உங்கள் மீது சுமத்தினார் அதை மக்கள் சிலர் ஏற்று கொள்கின்றனர்.
 காரணம் அனைவருக்கும் பதில் கொடுக்கும் அமைச்சர் ரிசார்ட் ஏன் மௌனமாக இருக்கின்றார். தவறு செய்துள்ளார் என நினைத்துள்ளனர்.

 இனவாத ரங்கா உங்களுக்கு எதிராக பேசினார் அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்தவில்லை எதிரியை பழிவாங்க நிகழ்ச்சி நடத்தினார். என்பது தான் உண்மை செயலாளர் பதவி என்பது சில வேளைகளில் தன் கட்சி தலைவரை கூட தூக்கி எறியும் பதவி என்பது உண்மை. அப்படி பட்ட பதவியை YLS ஹமீடுக்கு சும்மா தூக்கி கொடுத்திருக்க மாட்டீர்கள். அவரிடம் எதோ ஆளுமை இருந்திருக்கும் ஆகையினாலேயே கொடுத்திருப்பீர்கள்.

 அவரிடம் தகுதிகள் என்ன இருக்கு என்று பார்க்காமல் விவாதத்தில் கலந்து கொண்டு அவர் உங்கள் மீது போலி குற்ற சாட்டுகளை சுமத்தி இருந்தால் மக்களுக்கு தெளிவு படுத்தி மக்களுக்கு உண்மையான சத்திய தலைவன் என நிரூபியுங்கள் செயலாளர் உங்களை விவாதத்துக்கு அழைக்கின்றார் முடிந்தால் சென்று விவாதம் செய்து உண்மையை வெளிக்கொண்டுவாருங்கள் பின் மக்கள் செயலாருக்கு தகுந்த பாடம் கற்பிப்பார்கள் இன்ஷா அல்லாஹ் இல்லையெனில் குற்றத்தை ஒப்புக்கொள்ளுங்கள்.

 சபா ரௌஸ் கரீம்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -