சுலைமான் றாபி-
மலர்ந்துள்ள 2017ம் புது வருடத்தினை முன்னிட்டு இன்றைய தினம் (02) அக்கரைப்பற்று வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மாகாணப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.நிசார் தலைமையில் புது வருட சத்தியப்பிரமாண நிகழ்வுகள் அக்கரைப்பற்று வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அலுவலக வளாகத்தில் இடம் பெற்றது.
இதில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மாகாணப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.நிசார், பிரதம பொறியியலாளர் எம்.பி.அலியார், நிறைவேற்றுப் பொறியியலாளர் கே.எல்.எம். இஸ்மாயில் உள்ளிட்ட அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
இதே வேளை 2017ம் ஆண்டில் வறுமையை ஒழித்து நாட்டு மக்களுக்கான பாதுகாப்பான எதிர்காலத்தினை தோற்றுவிப்பதற்கான அரசாங்க சேவை உறுதி மொழிகளும் அனைத்து உத்தியோகத்தர்களாலும் வாசிக்கப்பட்டு சத்தியப்பிரமாணம் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.



