அரசியலில் இளைஞர்கள் மிக முக்கியமாக ஈடுபட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது - முனாஸ்

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்

ன்றய இளைஞர்கள் பிழையாக வளிநடாத்தப்படுகின்ற அதே நேரத்தில் எதிர்கால அரசியலை தூய்மைப்படுத்துகின்ற வகையில் இளைஞர்கள் சரியான முறையில் வழி நடாத்தப்படுவார்களாயின் எமது சமூகத்தில் மட்டுமல்லாது நாடே பயண் அடையக்கூடிய வகையில் அரசியலை இளைஞர்கள் சரியாக எடுத்துச் செல்வார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காஞ்கிரஸின் முன்னாள் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும், கிழக்குமாக முதலமைச்சரின் ஊடக செயலாளரும், இம்போட் மிரர் செய்திவலைத்தளத்தின் பனிப்பாளருமான எஸ்.எல் முனாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த விடயம் சம்பந்தமாக முனாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்றய இளைஞர்கள் ஒரு தேவைக்காக மாத்திரம் அரசியலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள் ஆனால் அந்த நிலமையை மாற்றப்பட வேண்டும். வேலைவாய்ப்புக்களை மாத்திரம் காட்டி திசை திருப்பப் படுகிற இன்றைய இளைஞர்கள் அதனை உணர்ந்து அந்த முறமையை மாற்றி அமைப்பதற்கு அவர்களால் அரசியலில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் தூய்மையான அரசியலினை கையில் எடுக்க வேண்டும். அத்தோடு தற்பொழுது அரசியலில் இளைஞர்கள் பலிக்காடாக்கபடுவதில் மாற்றம் கொண்டுவருவதற்காகவும், சமூகத்தின் மத்தியில் புதிய அரசியல் கலாச்சரத்தினை வளர்ந்து வரும் எதிர்கால இளம் சமூகத்தின் மத்தியில் உருவாக்குவதற்கு என்ன மாற்றத்தினை ஏற்படுத்தலாம் என இளைஞர்கள் சிந்திக்க வேண்டிய மிக முக்கிய காலகட்டமாக நிகழ்காலம் இருக்கின்றது.

அதனால்தான் இளைஞர் பாராளுமன்றம் என்ற ஒரு நடைமுறை அறிமுகம் இந்த நாட்டிலே செய்யப்பட்டது. இளைஞர் பாராளுமன்ற திட்டம் ஒரு பயிற்சியாக கொண்டுவரப்பட்டாலும் அதில் ஈடுபட்டவர்களும், ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்களும், அவர்களை வழை நடாத்துபவர்கள் தங்களது இலட்ச்சிய பாதையினை விட்டு விலகி இன்று வேறு பாதையில் செயல்படுவதாகவே வெளிப்படையாக தெரிகின்றது.

வரலாறுகளைக் கூறிக்கொண்டு சமூகத்தையும் ஊர்களையும் ஏமாற்றி கொண்டிருப்பவர்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து அதனை மாற்றியமைக்க வேண்டடிய நிலையில் எமது இளைஞர் சமூகமும் அவர்களை வழி நடாத்துபவர்களும் தள்ளப்பட்டுள்ளார்கள். உதாரணமாக இன்றைய இளைஞர்களின் ஏராளமானவர்களின் முகநூல் பக்கங்களைப் பார்த்தால் அவர்களின் சமூக ஈடுபாடும் அதனுடனான சிந்தனைகளும் மிக குறைவாக இருப்பது தெட்டத்தெளிவாக தெரிகிறது.

இன்று இலங்கையில் வாழும் மூவின மக்களில் சிறுபான்மையினமாக தமிழர்களும் முஸ்லிம்களும் வாழும் இந்த நாட்டில் தமிழ் இளைஞர்கள் ஒரே கோட்டில் கொள்கையுடன் பயணிக்கிறார்கள் பயணிக்கிறார்கள். ஆனால் அந்த சிந்தனை முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் இது வரை எடுபடாமலும், சிந்திக்க படாமல் இருப்பது சம்பந்தமாக ஏன் முஸ்லிம் சமூகமும் இளைஞர்களை வழி நடாத்துபவர்களும் யோசிக்க தவறியவர்களாக சுயநல அரசியலினை மேற்கொள்கின்றார்கள் என்பதனை முஸ்லிம் சமூகம் சிந்தித்து செயற்படுத்த வேண்டிய நிலையில் இருக்கின்றது.

இளைஞர்களுக்கு விழிப்புணர்வு மூலம் நிறைய தெளிவுகள் ஏற்படுத்த வேண்டும். இதுதான் இன்றய கட்டாயத்தேவையாகவும் இருக்கிறது. இந்த தேசத்தைக் கட்டிக்காக்க வேண்டிய கடமைப்பாடு இளைஞர்களுக்கு இருக்கிறது. இதற்காக இளைஞர்கள் முன் வரவில்லைஎன கூறமுடியாது. ஏராளமான இளைஞர்கள் இதன்பால் பற்றுள்ளவரகளாக இருக்கிறார்கள். ஆனால் அவர்களை வழிகெடுக்கும் சிலர் வழிகெடுத்து திசைகளை மாற்றிவிடுகிறார்கள். அப்படியான இளஞர்களை இனம் காணுவதன் மூலமும் இன்னுமின்னும் இளைஞர்களுக்கு பயிற்சிகள் வழங்குவதன் மூலமும் நிறைய மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்பது உண்மையான விடையம். மாறாமல் இருப்பது மாற்றங்கள் மாத்திரமே.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -