முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அவர் விரும்பியதை செய்வதற்கான சுதந்திரம் உண்டு எனவும், இருப்பினும் தானே இந்நாட்டின் பிரதமர் எனவும், ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
2017 இல் அரசாங்கத்தை கவிழ்க்கப்போவதாக, மஹிந்த ராஜபக்ஷ கடந்த வாரம் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தமை தொடர்பில் ஊடகவியலாளர்களால் வினவப்பட்ட கேள்விக்கும் பதிலளிக்கும் வகையிலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.புதுவருட முதல் நாள் கடமைகளை ஆரம்பிக்கும் முகமாக, அலரி மாளிகையில் இன்று (02) இடம்பெற்ற ஊடவியலாளர்கள் நிகழ்வின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
அத்துடன் "மஹிந்த ராஜபக்ஷவுக்கு இவ்வரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு வாய்ப்பு வழங்கும் வகையில், நான் ஒரு வாரத்திற்கு சுவிட்சர்லாந்து செல்லவுள்ளேன்" எனவும் அவர் இதன்போது தெரிவித்திருந்தார்.
