காணாமல் போன மீனவர்களை மீட்பதற்கு ஹரீஸ் மாலைதீவு பயணம்

அகமட் எஸ். முகைடீன், ஹாசீப் யாசீன்-
காணாமல் போய் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் உள்ள நான்கு மீனவர்கள் உள்ளிட்ட இயந்திரப் படகினை மாலைதீவு கடற்பரப்பில் தேடுவதற்கான நடவடிக்கை எடுப்பதற்கும் மாலைதீவு அரசின் பாதுகாப்பில் உள்ள மீனவர்கள் இருவரையும் ஆழ்கடல் இயந்திரப் படகினையும் மீட்பதற்கும் அந்நாட்டு உயர் அதிகாரிகளை சந்திப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் நாளை (7) சனிக்கிழமை அதிகாலை மாலைதீவு பயணமாகிறார்.

கல்முனை பிரதேசத்திலிருந்து மீன் பிடிக்க கடலுக்குச் சென்று காணமல் போன இரண்டு ஆழ்கடல் மீன்பிடி இயந்திரப் படகுகள் மற்றும் 6 மீனவர்களுள் இரண்டு மீனவர்கள் மற்றும் ஒரு இயந்திரப் படகு என்பன மாலை தீவில் கரையொதுங்கி தற்போது அவர்கள் மாலைதீவு அரசின் பாதுகாப்பில் உள்ளனர். ஏனைய நான்கு மீனவர்கள் உள்ளிட்ட இயந்திரப்படகு மாலைதீவு கடற்பரப்பில் தத்தழிப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

மேற்குறித்த விடயம் தொடர்பாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் நாளை அதிகாலை மாலைதீவு நாட்டுக்கு பயணிக்கவுள்ளார். இவ்விஜயத்தின்போது அந்நாட்டு அரச உயர் அதிகாரிகளை சந்தித்து மாலை தீவு அரசின் பாதுகாப்பில் உள்ள இரண்டு மீனவர்கள் மற்றும் ஒரு இயந்திரப் படகு என்பவற்றை நாட்டிற்கு கொண்டுவருவதற்கும் ஏனைய நான்கு மீனவர்கள் உள்ளிட்ட இயந்திரப்படகினை மாலைதீவு நாட்டு கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு பிரிவின் உதவியுடன் மாலைதீவு கடற்பரப்பில் தேடுவதற்கும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் நடவடிக்கை எடுக்கவுள்ளார்.

அதேவேளை அமைச்சர் றவூப் ஹக்கீம் மற்றும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் ஆகியோருடனான அம்பாறை மாவட்ட ஆழ்கடல் இயந்திரப் படகு மீன்பிடி சங்க தலைவர் எம்.நசீர் உள்ளிட்ட சங்க பிரதிநிதிகள், காணாமல் போன இயந்திரப் படகு உரிமையாளர் மற்றும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட குழுவினரது நேற்றைய (5) கொழும்பு சந்திப்பின் பின்னர் இலங்கை பாதுகாப்பு செயலாளர் மற்றும் கடற்படை தளபதி ஆகியோருடன் தொடர்பு கொண்டு காணமல் போயுள்ள மீனவர்களை தேடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் தலைமையில் அம்பாறை மாவட்ட ஆழ்கடல் இயந்திரப் படகு மீன்பிடி சங்க தலைவர் எம்.நசீர் மற்றும் றஹீம் உள்ளிட்ட சங்கத்தின் முக்கி பிரதிநிதிகள் இன்று (6) வெள்ளிக்கிழமை மாலை பாதுகாப்புச் செயலாளரை பாதுகாப்பு அமைச்சில் சந்தித்து இந்திய மற்றும் மாலைதீவு கடற்படையினரின் உதவியுடன் தேடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்போது பாதுகாப்புச் செயலாளர் குறித்த மீனவர்களை தேடுவதற்கான உத்தரவினை கடற்படையினருக்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -