"பிரதி அமைச்சர் அமீர் அலிக்கு அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீனவ சங்கம் கண்டனம்"

அகமட் எஸ்.முகைடீன்-
ல்முனை மீனவர்கள் காணாமல் போய் மீட்கப்பட்டுள்ள நிலையில் கட்சி அரசியலுக்காக உண்மைக்குபுறம்பான செய்திகளை வெளியிட்டு பிரதி அமைச்சர் அமீர் அலி மீனவர்களின் உயிர்களுடன் விளையாடவேண்டாம் என அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீனவ சங்கம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

மேலும் அவ்வறிக்கையில் தெரிவிக்கையில்,

கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் வீடு திரும்பாத நிலையில் மீனவ சங்க பிரதிநிதிகள் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்;.எம்.எம்.ஹரீஸினை தொடர்பு கொண்டு எடுத்த துரிதநடவடிக்கையின் பயனாக மீனவர்களை தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

இவ்வாறான நிலையில் அதிஷ்டவசமாக கல்முனை மீனவர்கள் மாலைதீவு கடல் பிரதேசத்தில்கரையொதிங்கியுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து பிரதி அமைச்சர் ஹரீஸ்தலைமையில் அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீனவ சங்க பிரதிநிதிகள் அமைச்சர் ரவூப் ஹக்கீமை நேற்றுவியாழக்கிழமை கொழும்பில் சந்தித்து மாலைதீவிலுள்ள மீனவர்களை நாட்டுக்கு கொண்டுவருவதுதொடர்பாக ஆராயப்பட்டு அதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

நிலைமை இவ்வாறிருக்க பிரதி அமைச்சர் அமீர் அலி காணாமல் போன மீனவர்களை மீட்கும் பணியில்தான் மட்டும் முயற்சித்து அதனை செய்ததாக உண்மைக்கு புறம்பான செய்திகளை ஊடகங்கள் மற்றும்சமூக வலைத்தளங்கள் வாயிலாக பரப்பி மீனவர்களின் துன்பத்தில் தனது கட்சி அரசியலை செய்யமுயன்றுள்ளதானது எங்களை கவலையடையவைத்துள்ளதுடன் இந்நடவடிக்கையினை வன்மையாககண்டிக்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -