சொந்த நிதியிலிருந்து பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய ஷிப்லி

ஒரு மனிதனின் ஆரம்பக் கல்வியானது சிறந்த முறையில் அமைந்துவிட்டால் அவன் தனது வாழ்நாளை சிறப்பாக அமைத்துக் கொள்வதோடு, நாட்டிற்கும், சமூகத்திற்கும் சிறந்ததொரு நற்பிரஜையாக மிளிருவான். இவ்வாறு உருவாகுவதற்கு ஆரம்பக் கல்வி சிறப்பாக வழங்கப்படுவதுடன் அதனை ஊக்கப்படுத்துபவர்களாகவும் நாம் இருக்கவேண்டும். 

அதனடிப்படையில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் நடைபெற்ற மஞ்சந்தொடுவாய் அஷ்ரப் பாலர் பாடசாலையின் மாணவர் வெளியேற்று விழாவும், கௌரவிப்பு நிகழ்விலும் பிரதம அதிதியாக கலந்துகொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் இப்பாலர் பாடசாலையிலிருந்து வெளியாகி இவ்வருடம் 2017ஆம் ஆண்டு முதலாம் தரத்திற்கு காலடி எடுத்து வைக்கும் அனைத்து சிறார்களுக்கும் தேவையான பாடசாலை கற்றல் உபகரணங்களை தனது சொந்த நிதியிலிருந்து பெற்றுத் தருவதாக வாக்குறிதியளித்திருந்தார். 

அதற்கமைவாக கொடுத்த வாக்குறுதியினை நிறைவேற்றும் முகமாக 2017.01.05ஆந்திகதி - வியாழக்கிழமை மஞ்சந்தொடுவாய் அஷ்ரப் பாலர் பாடசாலையிலிருந்து வெளியேறி இவ்வருடம் முதலாம் தரத்திற்குச் சென்ற மாணவர்களுக்கு ஒருதொகை கற்றல் உபகரணங்களை தனது சொந்த நிதியிலிருந்து கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் வழங்கி வைத்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -