மலையக புரட்சிப் போரின் தலைவர் அமரர்.சந்திரசேகரன் - ஸ்ரீ நேசன்

க.கிஷாந்தன்-
லையக மக்களுக்காக அவர்களின் உரிமைகளை தக்கவைத்துக் கொள்ள ஒரு புரட்சி போரின் தலைவரானவர் அமரர்.சந்திரசேகரன். ஏரதாள அரை தசாப்த காலம் மண்ணில் வாழ்ந்த இவர் மூன்று தசாப்த காலம் மக்களுக்காக முற்போக்கான அரசியலில் சிறந்து விளங்கியவர் என தலவாக்கலையில் இடம்பெற்ற அமரர்.பெ.சந்திரசேகரனின் சிரார்த்த தினத்தில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையில் மட்டகளப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீ நேசன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தனது உரையில் தெரிவித்ததாவது,

வடக்கு, கிழக்கு தமிழ் மொழிக்கும் மலையக தமிழ் மொழிக்கும் பாரிய வித்தியாசங்கள் இருந்தது. ஆனால் அமரர்.சந்திரசேகரன் சிறந்த பேச்சாளர் என்ற ரீதியில் அவரின் மொழியில் செழுமை காணப்பட்டது.

இன்று மலையகத்திலம் சரி வடக்கு, கிழக்கிலும் சரி தமிழ் மொழி சரளமாக ஒத்த ரீதியில் பேசப்படுகின்றது. உண்மையாகவும், நேர்மைகயாகவும், துணிச்சலாகவும் அரசியலில் ஈடுப்பட்டு வந்த அவர் குண்டு சட்டியில் குதிரை ஓட்டியவராக இல்லாமல் பெருந்தலைவராக செயல்பட்டு வந்தார்.

ஒரு காலத்தில் சிறைவாசம் சென்றிருந்த இவர் மக்களுக்காகவே சேவை செய்தவர். நகரசபை, மாகாண சபை, ஆகியவற்றில் போட்டியிட்டு படிப்படியாக அரசியலில் முன்னேறி பாராளுமன்றத்திற்கு வந்து அமைச்சராக செயல்பட்டார்.

மலையக மக்களுக்கு ஓர் புதிய பாதையை உருவாக்க பாடுபட்ட இவரை இம்மக்கள் இழந்து விட்டமை வேதனையை தருகின்றது. 2005ம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு பெரும் முகமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தொடர்பில் யுத்த தலைவரிடம் இரண்டு கோரிக்கைகளை பெ.சந்திரசேகரன் முன்வைத்தார்.

இதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவை பெருக்கினால் யுத்தத்திற்கு சீரான முடிவை பெற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும் என்று சொன்னார். அதேவேளையில் மஹிந்த ராஜபக்ஷ தனது கழுத்தில் இட்டிருக்கம் சிவப்பு துண்டானது எதிர்காலத்தில் தமிழர்களின் கழுத்தை நெரிக்கும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தா்ர. இதை என்னால் மறக்க முடியாது.

மலையக மக்களின் உரிமை விடுதலை போராட்டத்திற்கு சக்தி இவர் ஊடாகவே கிடைக்கப்பெற்றது. இந்தளவுக்கு மகத்துவம் பெற்ற தலைவர் சந்திரசேகரன் ஆவார். இவர் மலையகத்தை மாத்திரம் பார்க்கவில்லை. மேல் மாகாணம் வடக்கு, கிழக்கு என இவரின் குரல் ஒழித்தது.

கடமை, கண்ணியம் கட்டுப்பாடு என்று வாழ்ந்த இவரின் கொள்கைகளை அணைவரும் மதிக்க வேண்டும். இவரின் அரசியல் வாழ்க்கையில் பல கஷ்டங்களையும் நஷ்டங்களையும் அனுபவித்த இவர் பல நிர்பந்தங்களுக்கும் ஆளாகி நிலையில் கட்சிகள் மாறினாலும் அடிப்படை கொள்கையில் இருந்து மாறவில்லை.

மலையகத்தின் தலைமைத்துவம் வடக்கு கிழக்கு மக்களுக்கு முன் உதாரணமாக அமைய வேண்டும். தமிழ்க்காவும், தமிழ் மக்களுக்காகவும் வாழ்ந்த இவர் சாகவில்லை. சமூக மாற்றத்திற்கு கல்வியும், தனி வீடு வேண்டும் என்பது இவரின் கொள்கையாக இருந்த வேளை அறிவும், ஆற்றலும் வலுமை மிக்க சமூகமாக மலையக சமூகம் மாற்றம் பெற இவர் வழிசமித்துள்ளார் என மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -