யாழ் ஒஸ்மானியாக் கல்லூரி மாணவி ஜாபீர் நூறூல் சிபா 3ஏ பெறுபேற்றை பெற்று சாதனை

பாறுக் ஷிஹான்-

2016 ஆம் ஆண்டிற்கான க.பொ.த (உ-த ) பரீட்சையின் வெளியாகிய பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ் ஒஸ்மானியாக் கல்லூரி மாணவி ஜாபீர் நூறூல் சிபா 3ஏ பெறுபேற்றை பெற்று சாதனை படைத்துள்ளார்.

மேற்படி கல்லூரியில் கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேற்றின் படி கலை பாடப்பிரிவில் மேற்குறித்த பெறுபேற்றை பெற்று பாடசாலைக்கும் குடும்பத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

மிகவும் வறுமை நிலையில் தனது கல்வியை தொடர்ந்த இம் மாணவி பல்கலைக்கழகம் செல்வதற்கு முன்னர் எம்மவர்கள் அம்மாணவிக்கு தகுந்த உதவியை வழங்க வேண்டும் என தனிப்பட்ட முறையில் வேண்டுகின்றேன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -