535 வறிய குடும்ப அங்கத்தவர்களுக்கு 14 இலட்சத்து 50 ஆயிரம் பெறுமதியான உபகரணங்கள் வழங்கி வைப்பு







பைஷல் இஸ்மாயில்-

கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பிரதேசங்களிலும் வாழும் மிக வறிய குடும்பங்களுக்கு என்னாலான வாழ்வாத உதவிகளை நான் வழங்கி வருகின்றேன் என்று கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் கூறினார்.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீரின் 2016 ஆம் ஆண்டுக்கான பண்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து அட்டாளைச்சேனை, ஒலுவில் பிரதேசங்களில் வாழும் 535 மிக வறிய குடும்பங்களுக்கு 14 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான வாழ்வாதார உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (09) கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீரின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி ஐ.எம் நயீம் தலைமையில் சுகாதார அமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டபோது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட ஒலுவில் பிரதேச மின்ஹா மாதர் சங்க அங்கத்தவர்களில் 184 குடும்பங்களுக்கு 1 இலட்சம் ரூபா பெறுமதியான வாழ்வாதார உபகரணங்களும், ஒலுவில் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள முச்சக்கர வண்டி சங்கத்தின் 110 முச்சக்கர வண்டி அங்கத்தவர்களுக்கு 2 முச்சக்கர டயர்கள் வீதம் 5 இலட்சம் ருபா பெறுமதியாக டயர்களும், 176 விவசாயிகளுக்கு 2 இலட்சம் ரூபா பெறுமதியான விவசாய உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இதேவேளை அட்டாளைச்சேனை மீனவர் சங்கத்தில் உள்ள 65 மினவர்களுக்கு 6 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான கடல் மீன்பிடி வலைகளையும் வழங்கி வைத்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசியல் அதிகாரத்தை பெற்றுத்தந்த எம்மக்களுக்காக என்னால் ஆன உதவிகளை நான் எப்போது செய்ய தயாராக இரிக்கின்றேன். இந்த வாழ்வாத உதவிகளையும் சமூக சேவைகளையும் என் அதிகாரம் இரிக்கும்போதுதான் செய்யமுடியும். இந்த அதிகாரம் என்னிடம் இரிக்கும்வரை நான் செய்வேன் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.

அந்த வகையில் எனது முயற்சியினால் குறித்த வாழ்வாதார உபகரணங்களை வழங்கி வருகின்றேன். அதிலும் விசேடமாக பதிவு செய்யப்பட்ட சங்கத்தில் உள்ளவர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வருகின்றது. இவ்வாறான வாழ்வாதார உதவிகள் பல தொடர்ந்தேர்ச்சியாக ஒவ்வொரு வருடமும் எனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் மூலமும், எனது தனிப்பட்ட நிதியின் மூலமும் இவ்வாறான வாழ்வார உபகரணங்களை நான் வழங்கி வருகின்றேன். எதிர்வரும் காலங்களில் எல்லாருக்கும் கிடைப்பதற்கான சகல ஏற்பாடுகளையும் நான் செய்யவுள்ளேன். என்றார்.

இதன் போது அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் செயலாளர் எம்.ஐ ஹனீபா. முன்னாள் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உதவித்தவிசாளர் ஏ.எல். நபீல், அமைச்சரின் பிரயேத்தியக செயலாளர் யு.எம். வாஹிட், கிராம சேவகர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள். மக்கள் வங்கி சம்மாந்துறை கிளையின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் எஐ.எம்.நபீல், சங்கத்தலைவர்கள் உள்ளிட்ட பிரதே முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -