இளங்கோ இளைஞர் கழகத்தின் தலைவர் திரு நிதர்சன் அவர்களின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இவ் நிகழ்வில், 32 தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.
இவ் நிகழ்வுகளின் பிரதம அதிதியாக வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதாவும், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஸ்தாபகருமான திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
சிறப்பு அதிதிகளாக தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு சு.காண்டீபன், வவுனியா இளைஞர் சேவைகள் மன்றத்தின் நிஸ்கோ திட்ட இயக்குனர் திரு ரி.அமுதராஜ், நடுச் செட்டிகுளம் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி திரு எல்.சுரேந்திரசேகரன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) மத்தியகுழு உறுப்பினர் திரு மகேந்திரன்(ராஜா) ஆகியோர் கலந்து கொண்டனர்.
அத்துடன் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் பொருளாளர் திரு த.நிகேதன், இளங்கோ இளைஞர் கழகத்தின் தலைவர் திரு நிதர்சன், மற்றும் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் உப தலைவர் திரு பி.கெர்சோன், கலாசார பிரிவிற்கான தலைவர் திரு தே.பிரகாஷ்கர், உறுப்பினர்களான திரு வ.பிரதீபன், திரு ஜெ.கஜுரன் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

