ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்ஸின் தலைவரும் நகர திட்டமிடல் நீர்வழங்கள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் நேற்று அம்பாரை மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டு அவரின் நிதியொதுக்கீட்டில் நடைபெறும் வேலைகளைப் பார்வையிட்டதுடன் அக்கரைப்பற்று வட்டமடுப் பகுதி விவசாயிகளின் காணிப்பிரச்சனையையும் உரிய இடத்துக்கே சென்று கேட்டறிந்து கொண்டார்.
பின்னர் கவிஞர் பாலமுனை முபீத் எழுதி வெளியிட்ட கவிதைநூல் வெளியீட்டு விழாவிலும் கலந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து நிந்தவூர் மக்களினால் மறிக்கப்பட்ட அமைச்சர் ஹக்கீமிடம் பொது மக்கள் பெரும் புகாரினைத் தெரிவித்தனர். அட்டப்பளத்தில் நிருமாணிக்கப்பட்டிருக்கும் மின் உற்பத்தி நிலையத்தினை உடனே அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் அதனால் பொதுமக்கள் சிறார்கள், மாணவர்கள் என பலரும் பெரும் அசெளகரியங்களை எதிர்நோக்குகின்றனர் எனவும் கிணறுகள் குடியிருப்புக்கள் மாஷடைவதாகவும் வழிமறித்த மக்கள் புகார்களாகத் தெரிவித்தனர்.
இது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் ஹக்கீம் உறுதியளித்து அங்கிருந்து சென்றார்.




