துபை: ஐக்கிய அரபு அமீரகத்தின் (United Arab Emirates) 45 ஆவது தேசிய தினம்
அமீரக தேசிய தினத்தையட்டி அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் முக்கிய கட்டிடங்கள் மலர்கள் மற்றும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
அமீரக மக்கள் மட்டுமன்றி இந்தியர் உள்ளிட்ட வெளிநாட்டவர் பெரும்பாலோர் தங்களது வாகனங்களில் அமீரக தேசியக் கொடியை பறக்க விட்டுள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகம் 1971ம் ஆண்டு டிசம்பர் 2ம் நாள் அபுதாபி, துபாய், ஷார்ஜா, அஜ்மான், உம்முல் குவைன் மற்றும் புஜைரா ஆகிய ஆறு மாகாணங்கள் இணைந்து உருவாக்கப்பட்டது. 1972ம் ஆண்டு ராசல் கைமா ஐக்கிய அரபு அமீரகத்துடன் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் நம்மவர்களும் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.




