பாலமுனை அய்ஷத்-
பாலமுனை சமூக மறுமலர்ச்சி மன்றம் SRC யின் பரவசம் 2016, பண்பாட்டு விழா! பாலர்விடுகை விழா! பாராட்டுவிழா! என முப்பெரும் விழாவாக நேற்று (18.12.2016) காலை பாலமுனை இப்னு ஸீனா வித்தியாலய மண்டபத்தில் அதன் தலைவர் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் MSM.அன்ஸார் MA தலைமையில் இடம் பெற்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ALM.நசீர் அவர்களும் கௌரவ அதிதிகளாக அக்கரைப்பற்று வலயக்கல்விப் பணிப்பாளர் அஷ்ஷெக் ALM.ஹாஸிம், அம்பாறை மாவட்ட முன் பள்ளிக் கல்விப்பணிமனையின் பணிப்பாளர் அல்ஹாஜ் KM.சுபைர், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னால் தவிசாளரும் விளையாட்டுத்துறை பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளருமான சட்டத்தரணி MA.அன்சில் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் அண்மைக் காலங்களில் பாலமுனை மண்ணுக்கு பெருமை சேர்த்த மண்ணின் முத்துக்கள் பலர் மாலை சூடி, விருது வழங்கி கௌரவித்துப் பாராட்டப் பட்டனர்.
அந்தவகையில் பாலமுனையின் முதல் கணக்காளர் எம்.எப்.பர்ஹான் (SLAS),
முதல் பெண் சட்டத்தரணி திருமதி எம்.வை.றிஸ்மியா அஸாம் (Att.Law), இளவயதிலேயே பல்கலைக் கழக விரிவுரையாளரான ஏ.எச்.எம்.றிபாஸ் (BA.Hons), மற்றும் கடந்த 2015ம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து பொறியியல் பீடத்துக்கு தெரிவான ஏ.எஸ்.எம்.அஸ்ஹர், எம்.என்.எம்.நதீம், எல்.எம்.ஆசிப் ஆகியோரும் வாழ்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
மேலும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்த கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர், அக்கரைப்பற்று வலயக்கல்விப் பணிப்பாளர், முன்பள்ளி கல்விப்பணிமனை பணிப்பாளர் மற்றும் முன்பள்ளி இணைப்பாளர் ஆகியோரும் வாழ்த்தி கௌரவிக்கப்பட்டதோடு இவ்வாண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் வெற்றியீட்டிய மாணவர்களும் பாராட்டப்பட்டனர். மேலும் பாலமுனையை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஏ.ஜே.றபீக் அவர்களின் சேவை நலனைப் பாராட்டி அவரது தந்தை அப்துல் ஜப்பார் அவர்களுக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரினால் நினைவுப்பரிசும் வழங்கப்பட்டது.
பாலர்களின் கண்கவர் கலை கலாச்சார நிகழ்ச்சிகள் என பலவகையான அம்சங்களைக்கொண்ட இந்நிகழ்வில் பிள்ளைகளின் பெற்றோர் பாதுகாவலர்கள் கல்வியலாளர்கள் சமூக ஆர்வலர்கள் நலன்விரும்பிகள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தனர்.







