பாணந்துறை பாலிகா பாடசாலையிலேயே பர்தா கழட்டுவதற்கு வற்புறுத்தப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்றைய தினம் (பழைய பாடத்திட்டத்திற்கு) வரவாறு பாடம் பரீட்சை எழுதுவதற்கு, முஸ்லிம் மாணவி பரீட்சை நிலையமான, குறித்த பாடசாலைக்குச் சென்ற போதே மேற்பார்வையாளரால் பர்தா கழட்டுவதற் வற்புறுத்தப்பட்டுள்ளார்.
மேலும் இதே பாடசாலையில் மற்றுமொரு பரீட்சை நிலையம் ஒன்று தனிப்பட்ட பரீட்சாத்திகள் பரீட்சை எழுதுவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பரீட்சை நிலையத்திலும் முஸ்லிம் மாணவிகள் பர்தா கழட்டுவதற்கு பணிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு நாளையதினம் பர்தா அணியாமல் வரும்படியும் கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேற்படி சம்பவங்கள் சில பகுதிகளில் இடம்பெற்றுக்கொண்டிருப்பதை அறியக்கூடியதாக உள்ளது எனவே இச்சம்பவங்கள் இனியும் தொடராதவன்னம் முஸ்லிம் அரசியல் தலைமைகள் உரிய அதிகாரிளுடன் தொடர்பு கொண்டு இதற்கான தீர்வினை பெற்றுத்தரும்படி பெற்றோர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.
