இனவாதத்தை தூண்டும் அரிசிமலை பிக்கு என்பவர் யார்..? - அன்வர் MPC

திருகோணமலை மாவட்டத்தின், புல்மோட்டை பிரதேசத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு காலப்பகுதியில் புல்மோட்டை அரிசிமலை பௌத்த தியான மண்டபத்திற்கு திட்டமிட்டு ஹம்பாந்தோட்டை பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்ட பணாமுற திளக்க வன்ச என்னும் பௌத்த பிக்கு அதனை பௌத்த கோவிலாக மாற்றி பின்னர் அரிசிமலையை சூழவுள்ள பகுதியை பௌத்த விகாரைக்காக்கான நிலமாக சுமார் அரிசிமலை பொன்மலைக்குடா வெற்றிலைக்கேணி மற்றும் வீரன் தீவு போன்ற முஸ்லிம்களுக்கு சொந்தமான 500 ஏக்கர் காணியினை புனித பூமியாக்க திருகோணமலையின் முன்னாள் அரசாங்க அதிபர் சில்வா மஹிந்தவின் அனுசரணையுடன் புல்மோட்டையின் ஏனைய பகுதிகளான 14ஆம் கட்டை பம்ப் ஹவுஸ், சாத்தனமடு மற்றும் ஆண்டான்குளம் போன்ற பகுதிகளையும் உள்ளடக்கியதாக சுமார் புல்மோட்டை பிரதேசத்தில் 2500 ஏக்கர் காணியினை புனித பூமிக்காக அளவிட முற்பட்டனர்.

இருந்தபோதும், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வரின் தலைமையில் குச்சவெளி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தௌபீக், புல்மோட்டை பெரிய பள்ளிவாசலின் தலைவர் கலீல் லெப்பைமற்றும் ஐயூப்கன் மௌலவி போன்றோர் புல்மோட்டை மக்களின் ஆர்ப்பாட்டத்தின் மூலம் பல தடவைகள் காணி அளவீடுகள் தடுத்து நிறுத்தப்பட்டதோடு, நீதிமன்றத்தினாலும் அளவீடுகளை மேற்கொள்ளாமல் இடை நிறுத்தம் செய்யப்பட்டன.

மேலும் அரிசிமலை பகுதியில் 2004ஆம் ஆண்டு காலப்பகுதியில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மூவருக்கு நிஹார்ப் நிறுவனத்தினால் கட்டிக்கொடுக்கப்பட்ட 
மூன்று வீடுகள் கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில் குறித்த காலப்பகுதியில் காலித் என்பவரின் வீட்டினை உடைத்து பௌத்த கோவிலுக்காக மேலதிகமாக கட்டிடம் கட்டப்பட்ட நிலையில் மாகாண சபை உறுப்பினர் அன்வர் மேற்கொண்ட முயற்சியின் பயனாக பல பிரச்சினைகளுக்கு மத்தியில் மீட்கப்பட்டு காலித் என்பவர் தனது வீட்டில் குடி அமர்ந்த நிலையில் அவர் இல்லாத சமயம் வீட்டின் ஓடுகள் கழட்டப்பட்டு கட்டிடங்கள் உடைக்கப்பட்ட நிலையில் புல்மோட்டை பொலிஸில் வீட்டு உரிமையாளரினால் முறைப்பாடு செய்யப்பட்டு தோல்வியுற்ற நிலையில் கொழும்பிலிருந்து சிங்கலே, ராவண பலய போன்ற இனவாத கும்பல்களை பௌத்த பிக்குகளோடு வரவழைத்து மிக மோசமாக நடந்துகொண்டவர் அரிசிமலை பௌத்த பிக்குவாகும். 

பின்னர் மிகுதி இரண்டு வீடும் படையினரிடமிருந்து கிழக்கு மாகாண சபை உறுப்பினர் விடுவித்து கொடுத்த நிலையில் தோல்வியுற்ற பௌத்த பிக்கு பணமுற திளக்க வன்ச அரிசிமலை பகுதியை கை விட்டு விட்டு தற்பொழுது 14ஆம் கட்டை பகுதியை நோக்கி 13,14ஆம் கட்டை பகுதியில் வெளி மாகாணங்களிலிருந்து சட்ட விரோதமாக குடியமர்த்தப்பட்ட நிலையில் அவற்றுக்கும் குச்சவெளி பிரதேச செயலாளரால் நீதி மன்றுக்கு கொடுக்கப்பட்டு சட்ட ரீதியாக வெளி ஏற்றுவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில் அதிலும் தோல்வி கண்ட பணாமுற இனவாத கும்பல்களில் ஒன்றான மஹாசேனா பலாக்காய என்ற கூட்டத்தோடு தொடர்பை ஏற்படுத்தி புல்மோட்டை பிரதேசத்திற்கு கொண்டு வந்து இனவாதம் பேசிய வீடியோக்களை முகநூலினூடாக வெளியிட்ட கும்பல்களின் ஒருவனான அமித் வீரசிங்க என்பவனின் முகநூலினூடாக காணக்கூடியதாக இருந்தது.

குறித்த வீடியோவில் புல்மோட்டையில் வாழும் முஸ்லிம்களின் உடை நடை கலாச்சாரம் என்பன சவூதி அரேபியாவை ஒத்தவையாகவும் அதிகமான பள்ளிவாசல்கள் காணப்படுவதாகவும் முஸ்லிம்களின் கடைகளுக்கு சிங்களவர்கள் போகக்கூடாது என்றும் கடந்த மாதம் நவம்பர் 27ஆம் திகதி புல்மோட்டையிலுள்ள சட்ட விரோத சிங்கள பெரும்பான்மை மக்கள் குடி அமர்ந்துள்ள பகுதியில் புதிய கடைகளுக்கு அடிக்கல் நாட்டப்படும் எனவே சிங்க இளைஞர்கள் ஒன்று படவேண்டும் எனவும் முகநூலில் பதிவை இட்டதன் பின்னர் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் முதலமைச்சர் ஊடாக கிழக்கு மாகாண பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்ததுடன் திருகோணமலை மாவட்ட பொலிஸ் மா அதிபர் புல்மோட்டை போலிஸ் அதிகாரி மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் போன்றோருக்கு வீடியோ மற்றும் போட்டோக்கள் அனுப்பப்பட்டு புல்மோட்டை பிரதேசத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பின்னர் குறித்த அரிசிமலை பௌத்த பிக்குவின் தலைமையில் மஹாசேனா பலாக்காய கும்பல்கள் குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு சட்ட விரோத குடியேற்றகாரர்களுக்கு சில பொருட்கள் வழங்கியதுடன் 50 கடைகளுக்கு சட்ட விரோதமாக அனுமதியற்ற முறையில் அடிக்கல் நாட்டும் நிகழ்வை அனுமதிக்ககூடாது என்று அரசாங்க அதிபர் பொலிஸாருக்கு பணிப்புரை வழங்கியதுடன் அதிலும் தோல்வியுற்ற பணாமுற 13ஆம் கட்ட பகுதியிலுள்ள பௌத்த கோவில் பகுதியில் அடிக்கல் ஒன்றை நாட்டி விட்டு புறப்பட்டு சென்றனர். எனவே புல்மோட்டை பிரதேசத்தில் பெரும்பாண்மை மக்களை குடியமர்த்த வேண்டும் என்ற எண்ணத்தோடு அலையும் அரிசிமலை பௌத்த பிக்கு தன்னுடைய நடவடிக்கைக்கு இனவாத கும்பல்களை இணைத்துக்கொண்டு செயல் பட்டு வருகின்றார்.

மேலும் புல்மோட்டை பிரதேசத்தில் எதிர்காலத்தில் முஸ்லீம் மற்றும் அண்மை கிராமமான பதவி ஸ்ரீ புற சிங்கள மக்களோடு உள்ள உறவை சீர்குலைக்க எடுக்கும் முயற்சி பிரதேச மக்கள் மத்தியில் அச்சத்தை தோற்று வைத்துள்ளது அத்தோடு புல்மோட்டை பிரதேச மக்கள் சிங்க மக்களின் காணிகளை அடாவடியாக பிடித்திருப்பதாகவும் வதந்திகளை பரப்புவதுடன் 
ஹம்பாந்தோட்டை பகுதியில் இருந்து வந்து இரு சமூகங்களையும் பிரிக்கின்ற முழு முயற்சியில் மஹிந்தவின் முகவராக செயற்படுவது புலனாகிறது.

எனவே, புல்மோட்டை பிரதேசத்தை அண்டிய ஏனைய பௌத்த விகாரைகளிலுள்ள பௌத்த துறவிகள் மிகவும் நெருக்கமாக புல்மோட்டை முஸ்லிம்களோடு உறவை வைத்துக்கொண்டிருக்கம் நிலையில் மஹிந்தவின் நிகழ்ச்சி நிரலில் நிழலாக இயங்கும் அரிசிமலை பௌத்த பிக்கு பணாமுற திளக்க வன்சவின் நடவடிக்கைக்கு நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் தான் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
புல்மோட்டை பிரதேசத்திற்கு கடந்த நவம்பர் மாதம் 27ஆம்திகதி வருகை தந்த படங்கள்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -