“பழனி அண்ணா உங்களுக்கு சாப்பிட வேணடும் என்ற ஆசை உண்டு, ஆனால் வாய் இல்லை”சிங்கள MP

பாராளுமன்றத்தில் இன்று தோட்டத்தொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பாக அமைச்சர் பழனி திகாம்பரத்திற்கு மஹிந்தானந்த அலுத்கமகே தமிழ் மொழியில் பதில் கூறியுள்ளார். பாராளுமன்றத்தில் இன்று மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி தொடர்பான குழுநிலை விவாதம் இடம்பெறுகின்றது.

இதில் மலையக மக்களின் சம்பளம், வீடுகள், நீர், கூட்டு ஒப்பந்தம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து அமைச்சர் பழனி திகாம்பரம் கருத்துக்களை முன்வைத்தார். இதற்கு பதில் தெரிவிக்கும் முகமாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தமிழ் மொழியில் விவாதித்தார்.

இதில் “பழனி அண்ணா அவர்களே உங்களுக்கு சாப்பிட வேணடும் என்ற ஆசை உண்டு, ஆனால் வாய் இல்லை” எனத் தெரிவித்தார். “நான் உங்களுக்கு நன்மை செய்வதற்காகவே பேசுகின்றேன். மலையகத்தில் ஏராளமான பிரச்சினைகள் இருக்கின்றன. கல்வி, வீடு, சுகாதாரம் போன்ற பிரச்சினைகள் இருக்கின்றன. இவைகளை எல்லாம் சீர் செய்ய வேண்டும். தற்போதைய அரசாங்கம் இன்னும் இன்னும் 2 வருடத்திற்கு மட்டுமே இருப்பார்கள். 2 வருடங்கள் முடிந்து விட்டன. அவர்கள் எதுமே செய்ய மாட்டார்கள்.

உங்களக்கு தேவையனவற்றை நீங்கள் கேளுங்கள்.

துறைமுகத்தை விற்றார்கள் அல்லவா, அந்தப் பணம் அவர்களிடம் உள்ளது. போய் அதைக் கேளுங்கள்” என தமிழில் அறிவித்தார். ஒரு சிங்கள பாராளுமன்ற உறுப்பினர் தமிழ் மொழியில் உரை நிகழ்த்தியமை அனைவர் மத்தியிலும் பேசப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -