வவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியின் பெற்றோர் தின விழா .! (படங்கள் இணைப்பு)








வுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியின் பெற்றோர் தின விழா முன்பள்ளியின் ஆசிரியர் திருமதி . மீரா குணசீலன் தலைமையில் 08/12/2016 (வியாழக்கிழமை) திருநாவற்குளம் கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வின் முதன்மை விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினர் திரு.கந்தையா சிவநேசன் (பவான்) அவர்களும்


சிறப்பு அதிதிகளாக வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதா திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) மற்றும் முன்பள்ளி மாவட்ட இணைப்பாளர் திருமதி. அருள்வேல்நாயகி , தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஆலோசகர் திரு முத்தையா கண்ணதாசன், வவுனியா முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் திரு.சி.ரவீந்திரன், குருமன்காடு பொலிஸ் அதிகாரி திரு.இலங்கேஸ்வரன் ,முன்பள்ளி பாடசாலைகளின் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், திருநாவற்குளம் இளைஞர் கழக உறுப்பினர்கள் ,கிராம முக்கியஸ்தர்கள், நலன் விரும்பிகள் என பலர் கலந்து கொண்டனர்.


மங்கல விளக்கேற்றல் நிகழ்வுடன் தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் , விருந்தினர்களின் உரை மற்றும் பரிசளிப்பு வைபவத்துடன் இனிதே நிறைவுபெற்றது.


வவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியின் பெற்றோர் தின விழாவிற்கு திரு. நாகராஜா (பொக்கன் ) அவர்கள் அனுசரணை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -