திருகோணமலை வீரர்கள் தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்த செயத்திட்டம் முன்னெடுப்பு - இம்ரான் MP

திருகோணமலை வீரர்கள் தேசிய அணியை பிரதிநிதித்துவம் செய்ய தேவையான செயத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன என திருகோணமலை ஐக்கியதேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினரின் வேண்டுகோளுக்கிணங்க கல்வியமைச்சின் 16 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் நவீன முறையில் மீள்நிர்மானம் செய்யப்படவுள்ள கிண்ணியா மத்தியகல்லூரி M.E.H மஹரூப் விளையாட்டரங்கின் அடிக்கல் நடும் நிகழ்வு வியாழக்கிழமை காலை இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார் அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்:-

எனது தந்தை M.E.H மஹரூபால் இம்மாவட்டம் முழுவதும் 22 புதிய பாடசாலைகள் அமைக்கப்பட்டன. பல பாடசாலைகளில் கட்டிடங்கள் அமைக்கப்பட்டன. ஆனால் அவரால் அமைக்கப்பட்ட கட்டிடங்கள் இன்றுவரை எதுவித புனர்நிர்மாணத்துக்கு உட்படாமலே காணப்படுகின்றன. அவருக்கு பின் அதிகாரத்துக்கு வந்த எந்த அரசியல்வாதியும் இதில் கவனம் செலுத்தவில்லை M.E.H மஹரூப் என்ற பெயரை இம்மாவட்டத்திலிருந்து அழிக்கும் செயற்பாடுகளாகவே இவை நோக்கப்படுகின்றன. M.E.H மஹரூப் எனும் பெயர் தாங்கிய அனைத்து கட்டிடங்களும் எதிர்காலத்தில் புனரமைக்கப்படும் அதன் ஆரம்ப நிகழ்வே இன்று நடைபெறுகிறது.

கிண்ணியா பிரதேசத்தில் உள்ள ஒரே ஒரு தேசிய பாடசாலை இதுவாகும். ஆனால் ஒரு தேசிய பாடசாலையில் காணப்பட வேண்டிய பௌதீக வசதிகள் ஒப்பீட்டளவில் இங்கு குறைவாகவே உள்ளன. இவை அனைத்தும் விரைவில் நிவர்த்திசெய்யப்படும். அண்மையில் கல்வியமைச்சரிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைவாக இங்கு நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டிருந்த Primary Learning Resource Centre க்கான கட்டிடத்தை இரண்டுமாடி கட்டிடமாக நிர்மாணிக்க அனுமதி பெறப்பட்டுள்ளது.

அத்துடன் இப்பாடசாலையை விளையாட்டில் சிறந்த பாடசாலையாக மாற்றுவது எனது கனவாகும். இன்னும் சில வருடங்களில் கொழும்பில் உள்ள பிரபல பாடசாலைகளுடன் போட்டியிட கூடிய பாடசாலையாக இதை மாற்றியமைக்க வேண்டும். அதற்கு அரசின் பாடசாலை விளையாட்டு அபிவிருத்தி செயற்திட்டத்தில் இப்பாடசாளையையும் உள்வாங்க தேவையான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

எமது மாவட்டத்தில் விளையாட்டு சபை ஒன்றை நிறுவி அதன்மூலம் எமது வீரர்கள் தேசிய அணியை பிரதிநிதித்துவம் செய்ய தேவையான செயத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும். முக்கியமாக பல வருடகால குறைபாடாக உள்ள கடினப்பந்து மைதானம் ஒன்றை இங்கு அமைப்பதற்கான நடவடிக்கை விளையாட்டு அமைச்சரின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படும் எனறார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -