HND மாணவர்களுக்கு நீதி வேண்டும்,சாரதிகள் சட்டத்தில் மாற்றம் வேண்டும் - சபையில் அமைச்சர் நஸீர்

சப்னி அஹமட-
கிழக்கு மாகாகாணத்தில் உள்ள சுகாதாரத்துறைக்கான வெற்றிடங்களை நிரப்பவேண்டிய தேவை கிழக்குமாகாணத்திற்கு உள்ளது என கிழக்குமாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமடினால் மாகாண ஆளுநர்செயலகம், மாகாண பொதுச்சேவைகள் ஆணைக்குழு பேரவைச் செயலகம் ஆகியவற்றுக்கான வரவுவெலவுத்திட்டத்தின் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;;

கிழக்கு மாகாண ஆளுநர் தொடர்பாக இங்கு தெரிவிக்கப்பட்டது ஆனால் ஆளுநர் கௌரவ உறுப்பினர், அமைச்சர்களின் செயற்பாகளை ஏற்றுக்கொள்ளமுடியாது ஆளுநரும் அதன்செயலாளரும் எம் அழைப்புக்களை ஏற்றுக்கொண்டு செயற்பாடுகின்றார். கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுக்குள்பாரிய அழுத்தங்கள் உள்ளன கிழக்கு மாகாண அன்மையில் நாம் கிழக்கு மாகாணத்தின் வைத்திய பிர்ச்சினைகளை கவனத்திற்கொண்டு 37 வைத்தியர்களை நாம் இனங்கண்டு நியமனங்களை வழங்கியிருந்தோம். இருந்தும் இவர்கள் தற்போது கடமையில் இருந்தாலும் 01வருடத்திற்கு பிறகு தங்களது மாவட்டங்களுக்கு செல்ல முயற்சி எடுத்து செல்வதனால் மீண்டும் அவ்விடங்களுக்கு வெற்றிடம் உள்ள பிரச்சினையாக உள்ளது.

அதுபோல் தான் தாதியர்கள், மருத்துவ ஆய்வுகூட தொழிநுட்பவியலாளர்கள, ஆசரியர் சேவையில் ஈடுபடுவோர் போன்றோர்கள் இவ்வாறு வெளி மாவட்டங்களில் நியமனங்களை பெற்று இன்று அமைச்சுக்களில் அமைச்சர்கள், முதலமைச்சர்களுக்கு அழுத்தங்களை வழங்கி இடமாற்றங்களை கோரிவருகின்றனர். குறிப்பாக உயர் தேசிய டிப்ளோமாவை முடித்த பட்டதாரிகள் இன்று தொழில்வாய்ப்பு இல்லாது மிகவு் கஸ்டத்திற்கு மத்தில் உள்ளார்.

அம்மாணவர்கள் பலமுறை இவ்சபைஊடாக எத்திவைத்தும் எவ்வித முன்னெடுப்புகளும் இடம்பெறாமல் உள்ளது. ஏன் ஏனைய மாகாண சபை மேற்கொளும் நடவடிக்கை போல் இம்மாகாணத்திலும் ஆசிரியர் சேவையில் அவர்களை இணைக்க முடியாமல் உள்ளதா..? எனவும்அமைச்சர்சபையில் வேண்டிக்கொண்டார்.

ஆளுநர் முதலமைச்சர் பொதுச்சேவை ஆணைக்குழச் செயலாளர் போன்றோர்களுக்கு இடையே ஓர் நெருங்கிய உறவுகள் இருக்கவேண்டும் அப்போதுதான் உருப்பினர்கள் கேட்கும் போது முதலமைச்சர் பதில்வழங்க தயார்நிலையில் இருக்க வேண்டும்.

இதனைக்கருத்திற்கொண்டு பொதுச்சேவை ஆணைக்குழு தங்களது ஒவ்வொரு நடவடிக்கைகளையும் முதலமைச்சருக்கு தெரியப்படுத்த வேண்டும். அதுபோல் கிழக்கு மாகாணத்தில் சாரதிகளுக்கு பல வெற்றிடங்கள் இருக்கும் போது இங்கு சாரதிகளுக்கு ஓர் சட்டம் விதிக்கப்பட்டுள்ளது அதாவது சாரதிகளாக நியமனம் பெற வேண்டும்என்றால் அவர்களுக்கு சாதாரணதர பரீட்சையில் திறமைச்சித்தி இருக்க வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது ஆகவே அதனை நீக்க உரியநடவடிக்களை எடுக்க வேண்டும்.உனவும் வேண்டிக்கொண்டார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -