DCC கூட்டத்திற்கு சமூகமளிக்காத அதிகாாிகள் மீது நடவடிக்க..!

சப்னி அஹமட், அபு அலா - 
ம்பாறை, பொத்துவில் அபிவிருத்திக் குழுக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டும் சமூகம்கொடுக்காத திணைக்களத் தலைவர்கள் மற்றும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான தீர்மானத்தை மேற்கொள்ளுமாறு அபிவிருத்திக் குழுவின் தலைவரும், சுகாதார பிரதி அமைச்சருமான பைசால் காசிம் வேண்டுகொள் விடுத்துள்ளார்.

பொத்துவில் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் பதன்கிழமை (07) அபிவிருத்திக் குழுவின் தவிசாளர் பிரதி அமைச்சர் பைசால் காசிம் தலைமையில் பொத்துவில் பிரதேச செயலக மண்டபத்தில் இன்று (07) நடைபெற்ற போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நடைபெற்ற பொத்துவில் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அதிகமான திணைக்களத்தலைவர்கள் மற்றும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் சமூகம் கொடுக்காமையால் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நாற்காலிகள் காலியாகக் காணப்பட்டுக்கிடந்தது.

பிரதி அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்:-

இலங்கையில் 5000 வைத்தியர் வெற்றிடங்களும், 10,000 தாதி உத்தியோகத்தர்களுக்குமான வெற்றிடங்களும் காணப்படுகின்றன. இந்நிலையில் வருடாந்தம் 1000 வைத்தியர்களே வெளியாகி வருகின்றனர். இவர்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டும் வருடாந்தம் 150 பேருக்கான பற்றாக்குறை ஏற்பட்டு வருகின்றது.

கிழக்கு மாகாணத்தில் 200 வைத்தியர்களுக்கும், 600 தாதி உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்களும் காணப்பட்டு வருகின்றன. இவ்வெற்றிடங்கள் எதிர் வரும் வருடத்தில் நிவர்த்திக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதேவேளை பொத்துவில் பிரதேசத்தில் முக்கியமாக தெரிவிக்கப்பட்டு வரும் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பிலான பிரச்சினைகள் தொடர்பில் பதிளளிப்பதற்காக வலயக்கல்விப் பணிப்பாளர் சமூகம் கொடுக்காமை தொடர்பில் கல்வி அமைச்சர் மற்றும் கல்விப்பணிப்பாளர், செயலாளர் ஆகியோருக்கு அறிவித்து நடவடிக்கை எடுக்குமாறு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறு கூட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகை தராத அதிகாரிகள் தொடர்பில் ஜனாதிபதி, உரிய அமைச்சு, அமைச்சின் செயலாளர்களுக்கு அறிவிக்குமாறும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீரும், அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் தவிசாளர் ஆகியோர்களினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. 

பொத்துவில் பிரதேசத்தில் 460 ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதாகவும் அதற்கான தீர்வுகள் இழுத்தடிக்கப்பட்டு வருவதுடன் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளரினால் பொத்துவில் உப கல்வி வலயம் தொடர்பில் தவறாக கருத்தும் தெரிவிக்கப்பட்டு வருவதாகவும் பொத்துவில் பிரதேச உப கல்வி வலய பணிப்பாளரினால் தெரிவிக்கப்பட்டது.

பொத்துவில் பிரதேசத்தில் இரண்டு ஆசரியர் பற்றாக்குறை மட்டுமே காணப்படுவதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல். தவம் தெரிவித்து வருவதுடன் பொத்துவில் பிரதேசத்தில் நியமிக்கப்படும் ஆசியரியர்களை அரசியல் அதிகாரத்தைப் பயன் படுத்திய வேறு பிரதேசங்களுக்கு இடமாற்றம் வழங்கி பொத்துவில் பிரதேச கல்வியை பாழடித்து வருவதாக பொத்துவில் பிரதேச சுதந்திரக் கட்சி அமைப்பாளரும், பொத்துவில் பிரதேச அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான அப்துல் மஜீட் தெரிவித்தார்.

இதேவேளை அறுகம்பை, சின்ன உல்லை கடற்கரை பிரதேசத்தில் மீனவர்களின் படகுகள் தரித்து வைப்பதற்கும், மீன்பிடி உபகரணங்களை வைப்பதற்குமான இட ஒதுக்கீட்டை மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாண எதிர்க்கட்சி தலைவரினால் பிரேரனை முன்வைக்கப்பட்டது.

அடுத்த அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் இதற்கான அறிக்கையை உரிய அதிகாரிகள் சமர்ப்பிக்குமாறு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

அத்துடன் பொத்துவில் அல்-இஸ்றாக் வித்தியாலய மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டடத்தை அகற்றுவதற்கும், பொத்துவில் பிரதேச வளங்களைப் பயன் படுத்தி அப்பிரதேச அபிவிரு;திகளை முன்னெடுப்பதில் உள்ள பிரச்சினைகளை கண்டறிந்து அதற்கான தடைகளை அகற்றுவதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் மின் விளக்குகள், சிறிய பாதைகள் மற்றும் வைத்தியசாலைகளில் காணப்படும் பற்றாக்குறைகள் தொர்பில் கண்டறிந்து அதனை நிவர்த்திப்பதற்கான தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டன.

இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர், கிழக்குமாகாண எதிர்க்கட்சி தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை, மாகாண சபை உறுப்பினர் கலையரசன், பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.எம். முஸாரத் மற்றும் திணைக்களத் தலைவர்கள் உயரதிகாரிகள் கலந்து; கொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -