முஸ்லிம்களின் உணர்வுகள் பாராளுமன்றில் ஒலிப்பது காட்போட் வீரத்தனமா? வை.எல்.எஸ்.ஹமீட்

எஸ்.அஷ்ரப்கான்-


னவாதிகள் மீண்டும் ஒரு முறை முஸ்லிம்களின்உணர்வுகளை தங்களது இனவாத செயற்பாட்டின்மூலமாகவும் இஸ்லாத்தை இழிவு படுத்துவதன்மூலமாகவும் ரணகளப்படுத்திக்கொண்டிருக்கின்றார்கள். எனவே முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் இருக்கின்ற ஒரேயொரு அடுத்தஉபாயம் எதிரணிக்கு செல்லவேண்டி ஏற்படும் என்கின்ற எச்சரிக்கையை முதலாவது விடுப்பதும் அதனையும் கண்டுகொள்ள அரசு தவறினால் எதிரணியில் அமர்வதுடன் இப்பிரச்சினையை முழுவீச்சில் சர்வதேச மயப்படுத்துவதுமாகும் என அகிலஇலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம்வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளஇனவாத நடவடிக்கைகள் தொடர்பாகவும் அண்மைய சில அமைச்சர்களது பாராளுமன்ற உரைகள் தொடர்பாகவும் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர் குறிப்பிடும்போது,

அதேநேரம் அரசாங்கத்தை ஆட்டிப்படைக்கும் பலம் கொண்ட 21 முஸ்லிம் பாராளுமன்றப் பிரதிநிதித்துவங்கள் கையறுநிலையில் இருக்கின்றஆர்கள். இந்நிலைமைகளில் முஸ்லிம் சமூகம் விரக்தியின் விழிம்பிற்கே சென்றுகொண்டிருக்கின்ற நிலையில் பாராளுமன்றத்தில் முஸ்லிம்களின் இந்த வேதனை உணர்வுகள் ஒரு ஈமானிய வெளிப்பாட்டின் அடிப்படையில் எதிரொலித்தது முஸ்லிம்களுக்கு ஆறுதலாக இருந்தது. ஆனால் அதன் பின்னர் ஊடகங்களை புரட்டிப்பார்க்கின்றபோது சில முஸ்லிம் அமைச்சர்கள் அவ்வாறு முஸ்லிம்களுக்காக பாராளுமன்றில் வெளிப்படுத்தப்பட்ட ஒரு உயிரூட்டமான உணர்வை“காட்போட் வீரர்களின் வீரத்தனம்” என்று கொச்சைப்படுத்திய அறிக்கைகள் மனதிற்கு மிகவும் கவலையளிக்கின்றது.

பாராளுமன்றம் என்பதே பேசுவதற்குத்தான். அங்கு செல்வதும் பேசுவதற்குத்தான். வாக்குகளைக்கேட்பதும் அதற்காகத்தான். ஆனாலும் அங்குசென்றதன் பின் நமது பிரதிநிதித்துவங்கள் மறைந்ததலைவர் உடைத்தெறிந்த பூட்டை எப்படியோ தேடி எடுத்துவந்து தமது வாய்களுக்குப் போட்டு பேசாமடந்தைகளாக அமர்ந்திருப்பதை பார்த்துஇரத்தக்கண்ணீர் வடித்த சமுதாயத்திற்கு அத்திபூத்தாற்போல் அந்த வாய்ப்பூட்டு கழற்றி வைக்கப்பட்டு முஸ்லிம்களின் உணர்வுகள் பாராளுமன்றில் வெளிப்படுத்தப் படுகின்றபொழுது அதனை காட்போட்வீரர்களின் வீரத்தனமாக கொச்சைப்படுத்தப்படுவது முஸ்லிம் சமுகத்தை மேலும் விரக்திக்குள்ளாக்கும் என்பதை இந்த அரசியல்வாதிகள் புரிந்து கொள்ளவேண்டும்.

இவ்வாறு கொச்சைப்படுத்துகின்ற அமைச்சர்கள் கூறுகின்றார்கள், பிரச்சினைகளை சமாதானமாக பேச்சுவார்த்தைகளின் ஊடாகத்தான் தீர்த்து வைக்கவேண்டும். வீரத்தனமான பேச்சுக்கள் அதற்குஉதவாது,என்று. கடந்த அரசு தொடங்கி இந்த அரசின்ஆட்சியில் 2 வருடங்கள் கடந்தும் முஸ்லிம்கள் பொறுமையாகத்தான் இருக்கின்றார்கள். பிரச்சினைகளை சமாதானமாகத் தீர்த்துவைக்க விரும்புகின்றார்கள். தீர்த்து வைக்கப்பட முடிந்ததா ? என்று கேட்க விரும்புகின்றோம். எத்தனைவருடத்திற்கு இவ்வாறு கூறிக்கொண்டு காலம்கடத்தப் போகின்றீர்கள் ? என்றும் கேட்கவிரும்புகின்றோம்.

அதேநேரம் முஸ்லிம்கள் இந்தப் பிரச்சினையைசமாதானமாகத் தீர்த்து வைக்கக் கூடாது. சண்டையினுடாகத்தான் தீர்த்து வைக்க வேண்டும்என்று ஒருபோதும் கூறவுமில்லை. இனிமேலும் கூறப்போவதுமில்லை. ஆனால் இப்பிரச்சினைக்குத்தீர்வு காண வேண்டிய பொறுப்பும் அதற்குத்தேவையான அதிகாரமுமுள்ள அரசு வாழாவிருக்கின்றபோது அந்த அரசைப்பார்த்து விரல்நீட்டி முஸ்லிம்களின் உணர்வை வெளிக்கொணர்ந்து அது தன் கடமையிலிருந்து தவறுமானால் அதனால்எற்படக்கூடிய எதிர்கால சாத்திய விளைவுகள் குறித்துஅரசை எச்சரிப்பதும் கூடாது என்றால், இந்த அரசில் எதற்காக நீங்கள் அமர்ந்து இருக்கின்றீர்கள் ?

எனவே முஸ்லிம் சமுதாயத்தை காட்டிக் கொடுக்கின்ற வரிசையில் சேர்ந்துவிட வேண்டாம். இந்தப்பிரச்சினைக்கு அவசரத் தீர்வு காண வேண்டிய தேவை அரசுக்கு இருக்கின்றது. எனவே முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து அரசுக்கு ஒரு காலக்கெடு விதிக்க வேண்டும். அப்பொழுதும் எதுவும் நடக்காவிட்டால் எந்த நோக்கத்திற்காக இந்த அரசை முஸ்லிம்கள் கொண்டுவர பங்களிப்புசெய்தார்களோ, அந்த நோக்கத்தை அடையமுடியாவிட்டால் அதற்குப் பின்னும் இந்த அரசில்இருப்பதில் பயனில்லை. எனவே அரசை விட்டுவெளியேறத் தயாராக வேண்டும். ஆட்சியைஉடனடியாக மாற்றுவதற்கு தேர்தல் ஒன்று அருகில்இல்லை. எனவே எமக்கு இருக்கின்ற ஒரேயொரு அடுத்த உபாயம் இவ்வாறு எதிரணிக்கு செல்லவேண்டி ஏற்படும் என்கின்ற எச்சரிக்கையை முதலாவது விடுப்பதும் அதனையும் கண்டுகொள்ள அரசு தவறினால் எதிரணியில் அமர்வதும்தான். அதற்கு அடுதத்தாக இப்பிரச்சினையை முழு வீச்சில் சர்வதேசமயப்படுத்துவதும்தான் என்றும் அவர் மேலும்குறிப்பிட்டார்.

அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்தமை

அதேநேரம் கடந்த (08.12.2016) அன்று இரவுகொழும்பில் இலங்கை முஸ்லிம் கவுன்சிலின்ஏற்பாட்டில் அமைச்சர் ராஜித சேனாரத்னவுடன்சமகாலப் பிரச்சினை தொடர்பாக ஒருகலந்துரையாடல் இடம்பெற்றது. அக்கலந்துரையாடலில் வை.எல்.எஸ். ஹமீட் அவர்கள்அமைச்சர் ராஜித சேனாரத்னவை நோக்கி“இனவாதிகளின் செயற்பாடுகள்தான் கடந்த அரசுதுக்கி வீசப்படுவதற்கும் இந்த அரசுகொண்டுவரப்படுவதற்கும் முஸ்லிம்கள் முழுமையாகப்பங்களிப்பு செய்வதற்கான காரணமாகும். ஆனால்கடந்த அரசில் முஸ்லிம்கள் என்ன வேதனையைஅனுபவித்தார்களோ அதே வேதனையைத்தான் இந்தஅரசிலும் அனுபவிக்கின்றார்கள் என்றால் அந்தஅரசுக்கும் இந்த அரசுக்கும் வித்தியாசம் என்ன ? கடந்த அரசு இனவாத செயற்பாடுகளைகட்டுப்படுத்தாததன் காரணமாக அந்த அரசேஇனவாதிகளின் பின்னால் இருக்கின்றது என்றுபரவலாக பேசப்பட்டது. இந்த அரசிலும் அதேநிலைமை என்றால் இந்த அரசும் இனவாதிகளின்பின்னால் இருந்து செயற்படுகின்றது என்று கூறினால்அது பொருந்துமா ? பொருந்தாதா ? பொருந்தாதுஎன்றால் ஏன் இந்த அரசிலும் இந்த இனவாதநடவடிக்கைகள் அனுமதிக்கப்படுகின்றன. என்றுகேள்வி எழுப்பினார்.

அதேநேரம் நீங்கள் புதிய அரசியல் அமைப்பைஉருவாக்கிக் கொண்டிருக்கின்றீர்கள். இன்றையஅரசியல் அமைப்பின் பிரிவு-12 எல்லோருக்கும் சமஉரிமை பற்றிக் கூறுகின்றது. ஆனால் ஒரு பௌத்தமதகுரு ஒரு சிங்களவருக்கு எதிராக ஒரு குற்றம்புரிகின்றபோது சட்டம் தானாக தன் கடமையைசெய்கின்றது. அதே மதகுரு முஸ்லிம்களுக்குஎதிராகவோ தமிழர்களுக்கு எதிராகவோ ஒரு குற்றம்புரிகின்றபோது சட்டம் செயற்படாமல் இருக்கின்றதேஏன் ? ஒரு அரச அதிகாரி தன் கடமையை செய்வதுதடுக்கப்பட்டால் அது ஒரு குற்றமாகும். (obstruction of public duty) ஆனால் பொலிசாரின் முன்னிலையில்மட்டக்களப்பில் குறித்த கிராம சேவை அதிகாரி தன்கடமையைச் செய்யச் சென்றபோது சுமணரத்னதேரரால் தடுத்து நிறுத்தப்பட்டாரே ! அப்பொழுதுசட்டம் தன் கடமையைச் செய்யவில்லையே ஏன் ? என்றும் கேள்வி எழுப்பினார்.

எந்தவொரு சமுகமும் நீண்டகாலம் அடக்கிஒடுக்கப்பட முடியாது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குவேண்டுமானால் அவ்வாறு செய்யலாம். இதனைத்தான்நாம் இன்று மியன்மாரில் காணுகின்றோம். அடக்கிஒடுக்க நினைத்தார்கள், ரோஹிங்கிய முஸ்லிம்களும்பொறுத்தார்கள். அழுதார்கள் துவண்டார்கள். இன்றுநிமிர்ந்துவிட்டார்கள். ஆயுதப் போராட்டம்வெடித்துவிட்டது. இதனைத்தான் இலங்கைவரலாற்றிலும் கடந்த 30 ஆண்டுகள் கண்டோம். எனவே இந்த அரசாங்கம் தொடர்ந்தும் இந்தஇனவாத செயற்பாடுகளுக்கு இடம்கொடுத்துவாய்ப்பேச்சில் ஆறுதல்களைச் சொல்லிக் கொண்டுகாலம் கடத்தப் போகின்றதா ? என்றும் கேள்விஎழுப்பினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -