நிந்தவூரில் சுகாதார அமைச்சர் தலைமையில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு

அபு அலா,சப்னி அஹமட் –
டந்த ஜனவரி மாதம் தொடர்க்கம் டிசம்பர் மாதம் வரையில் கல்முனை பிராந்தி சுகாதார சேவைகள் பணிமனையின் கீழுள்ள வலயத்தில் சுமார் 564 பேர் டெங்கு நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.

கல்முனை சுகாதார சேவைகள் பணிமனையினால் ஏற்பாடு செய்யப்பட்ட டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு இன்று (04) நிந்தவூர் பிரதேசத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் போது சுகாதார அமைச்சர் உரையாற்றுகையிலையே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்; 

கடந்த 10 மாதங்களை விட நவம்பர் மாதம் மிக கூடுதலான டெங்கு நோயாளர்கள் கல்முனை வலயத்தில் இத்தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர். டெங்கு இருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கில் இந்த நல்லாட்சி அரசும், சுகாதார அமைச்சும் பாரிய திட்டங்களை முன்வைத்து இதனை தேசியரீதியாக உள்ள சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
 

மத்திய அரசுடன் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சும் இணைந்து மக்களை டெங்கு நோய்களிலில் இருந்து பாதுக்கும் நோக்கில் பல கோடிக்கான ரூபாய்களை செலவீடு செய்து வருகின்றது. இதன் நோக்கம் மக்கள் நோய்யற்ற சமூதாயமாக மாற்ற வேண்டும் என்பதே அரசினதும், சுகாதார அமைச்சினதும் நோக்கமாகும்.

இன்று இலங்கையில் மக்களை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் இந்த டெங்கு நோய்களில் இருந்தும் நாமும் எமதும் பிள்ளைகளும் பாதுகாப்பாக இருப்பதற்காக எம்மால் முடிந்த அனைத்து விதமான முன்னெடுப்பக்களை செய்தல் வேண்டும் குறிப்பாக இந்நோய் பரவும் வழிமுறைகள் பல உள்ளன அதைஎல்லாம் எம்மால் முடிந்தவரை அகற்றி டெங்குநோய்யற்ற வாழ்க்கை வழிமுறை பின்பற்ற ஒவ்வொருத்தரும் செயற்பட்டால் மாத்திரமே இந்த டெங்கில் இருந்து எம்மை பாதுகாத்துக்கொள்ளலாம். 

டெங்கு நோயைக்கட்டுப்படுத்துவதற்கான சிறந்த வழி டெங்கு நுளம்புகள் பெரும் இடங்களை அழிப்பதாகும். எனவே தனி மனதனோ அல்லது சமூகமோ டெங்கு பெரும் வண்ணம் சூழலை அசுத்தப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். சட்டதின் மூலம் இதனை சாதித்து விட முடியாது. இறையச்சத்தின் மூலமே சமூக அக்கறையின் மூலமுமே இதனை சாதிக்காலாம் எனவும் அமைச்சர் அங்கு மேலும் சுட்டுக்காட்டினார். 

இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகளை பணிப்பாளர் வைத்தியர் ஏ.எல் அலாவுத்தீன், உதவிப்பணிப்பாளர் வைத்தியர் எம். இஸ்ஸதீன் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்துகொண்டனர். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -