”சத்ஹண்ட சிங்ஹல பத்திரிக்கைக்கு எதிராக தவ்ஹீத் ஜமாஅத் முறைப்பாடு”

வ்ஹீத் ஜமாத் செயலாளர் தொடர்பில் பொய்யான செய்தி வெளியிட்ட "சத்ஹண்ட "சிங்ஹல பத்திரிக்கைக்கு எதிராக "பத்திரிக்கை முறைப்பாட்டு ஆனைக்குழுவில்" முறையிட்டது தவ்ஹீத் ஜமாஅத்

கடந்த 04.12.2016 ஞாயிறு “சத்ஹன்ட” சிங்களப் பத்திரிகையில் சுபாஷ் ஜயவர்தன என்பவரால் “தவ்ஹீத் ஜமாஅத்தும் பொதுபல சேனாவும் ஒரே சம்பளப் பட்டியலில்” எனும் தலைப்பிட்டு முற்றிலும் உண்மைக்கு மாற்றமான, அவதூறை செய்தியாக வெளியிட்டமைக்கு எதிராக “பத்திரிக்கை முறைப்பாட்டு ஆணைக்குழுவில்” தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இன்று முறைபாடு பதிவு செய்யப்பட்டது. 

தவ்ஹீத் ஜமாஅத்தின் துணை செயலாளர் சகோ. ரஸ்மின் சட்டத்தரணியூடாக குறித்த முறைபாட்டை பதிவு செய்தார்.

சத்ஹன்ட பத்திரிக்கை வெளியிட்டிருந்த குறித்த அவதூறு செய்தியில், முன்னால் அரசாங்கத்தின் பாதுகாப்புச் செயலாளராக பதவி வகித்த கோதாபாய ராஜபக்சவினால் போஷிக்கப்பட்ட அடிப்படைவாத இரு அமைப்பினரே தவ்ஹீத் ஜமாஅத்தும் பொதுபல சேனா அமைப்பினரும் ஆவர். இதில் தவ்ஹீத் ஜமாஅத்தின் செயலாளர் அப்துர் ராஸிக் அவர்கள் இராணுவ புலனாய்வுத் துறைக்கு சம்பளத்திற்கு ஊதியம் புரிந்த உளவாளி ஆவார் என்று புலனாய்வுத் துறையினரூடாக ஜனாதிபதி செயலாளர் காரியாலயத்திற்கு தகவல் கிடைத்துள்ளதாகவும், 2008 ஆம் ஆண்டு மருதானையிலுள்ள ஒரு பள்ளிவாசலுக்குள் வெளிநாட்டைச் சேர்ந்த முல்லாக்கள் இருப்பதாக தகவல் வெளியிட்டவர் இந்த அப்துர் ராஸிக் என்பவர் தான் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சத்ஹன்ட பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட மேற்படி தகவலை ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் முற்று முழுதாக மறுப்பதோடு, பொது பலசேனா எனும் இனவாத அமைப்புடனும், கோதாபாய ராஜபக்சவுடனும் தவ்ஹீத் ஜமாஅத்தை தொடர்பு படுத்தி செய்தி வெளியிடுவதனையும் வண்மையாக கண்டிக்கின்றது. 

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைமை நிர்வாகத்தில் பணியாற்றும் எந்தவொரு நிர்வாகியும் எந்தவொரு கட்டத்திலும் எந்தவொரு அரசியல் வாதிக்கும் முதுகு சொறிந்து ஊதியம் பெறும் ஈனச் செயலில் ஈடுபட்டதில்லை என்பதனை இங்கு அழுத்தமாக பதிவு செய்வதோடு, யாருடைய அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காகவும் செயற்படுகின்ற வங்குரோத்து நிலை தவ்ஹீத் ஜமாஅத்திற்கு கிடையாது என்பதோடு, அரசியல் சாக்கடையில் சங்கமிக்கக் கூடாது என்பதனை அமைப்பின் யாப்பு விதியாகக் கொண்டு ஆன்மீக, சமுதாயப் பணிகளை மேற்கொள்ளக் கூடிய அமைப்பே தவ்ஹீத் ஜமாஅத் என்பதனையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றோம்.

தத்தமது அரசியல் சுயலாபங்களுக்காக கோதாபாயவுடன் தவ்ஹீத் ஜமாஅத்தை முடிச்சுப் போட்டு தேசத்துரோகி போன்றும், முஸ்லிம் சமூகத்தை காட்டிக் கொடுக்கும் சமூக விரோதி போன்றும் ஒரு மாய தோற்றத்தினை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் தவ்ஹீத் ஜமாஅத்துக்கு அபகீர்த்தியை உண்டாக்கி செல்லாக் காசாக மாற்ற முயலும் அரசியல் காய்நகர்த்தலாகவே இவ்வறிக்கை அமைந்துள்ளது.

பொறுப்பு வாய்ந்த ஒரு பத்திரிகை, கிடைக்கப் பெறும் செய்தியினை உறுதிப்படுத்தாது ஒருபக்க ஊதுகுழலாய் இருந்து செய்தி வெளியிடுவதானது ஊடக தர்மத்தினை குழிதோண்டி புதைப்பது போன்றதாகும் என்பதனையும் இங்கு சுட்டிக்காட்டுவதுடன், அரசியல் லாபங்களுக்காக இது போன்ற அவதூறுகளை சமூகமயப் படுத்துவதனையும் முற்றாக தவிர்ந்து கொள்ளுமாறும் சத்ஹன்ட பத்திரிகைக்கு அறிவுரை கூறிக்கொள்கின்றது தவ்ஹீத் ஜமாஅத். 

அதே சமயம், “உளவாளி” எனும் குற்றச் சாட்டை தக்க சான்றுகளுடன் நிரூபித்துவிட்டு அரச தரப்பு அமைச்சர்கள் ஊடகங்கள் முன்னிலையில் அறிக்கை விடுமாறும் சம்பந்தப்பட்டவர்களிடம் தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை வைத்துக் கொள்கிறது.

M.F.M ரஸ்மின் MISc
துணை செயலாளர்,
தவ்ஹீத் ஜமாஅத் - SLTJ
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -