திருகோணமலை- சாந்திபுரம் மெதடிஸ்த பாலர் பாடசாலை மற்றும் ஞாயிறு பாடசாலை பிள்ளைகளின் ஒளி விழா சாந்திபுரம் பாலர் பாடசாலையில் நேற்று (03) மாலை நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக திருகோணமலை மெதடிஸ்த சேகரத்தின் முகாமைக்குரு அருட்பணி சுஜிதர் சிவஞாயகம் அவைகள் மற்றும் மொறவெவ வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி போல் றொஷான் ஆகியோருடன்
ஏனைய மெதடிஸ்த ஆலயங்களின் பணியாளர்களும் - கிராம மக்கள்- பெற்றோர்கள் -மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அங்கு மாணவர்களின் பல்வேறு விதமான கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன் மாணவர்கள் அனைவருக்கும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். அதுமட்டுமின்றி வை.எம்.சீ.ஏ.
நிறுவனத்தினால் சிறப்பு நத்தார் பரிசில்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.




