மட்டக்களப்பு பொலிசார் மட்டக்களப்பு மங்கள ராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமரத்தின தேரர் மீது இன்று(6.12.2016) செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கை விசாரித்த மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா மட்டக்களப்பு மங்கள ராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமரத்தின தேரரை எதிர் வரும் 14.12.2016 புதன்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்திற்கு ஆஜராகுமாறு உத்தரவிட்டு அவருக்கு அழைப்பானை விடுக்குமாறும் உத்தரவிட்டார்.
கடந்த 3.12.2016 சனிக்கிழமையன்று ஆர்ப்பாட்டம் செய்தமை மற்றும் இன ரீதியான கருத்துக்களை அதன் போது தெரிவித்தமை, இயல்பு நிலையை குழப்புவதற்கு காரணமாக இருந்தமை போன்ற குற்றச்சாட்டுக்களை இவர் மீது மட்டக்களப்பு பொலிசார் முன் வைத்தே இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இதே நேரம் கடந்த 3.12.2016 சனிக்கிழமையன்று மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தினை தேரர் நடாத்திய ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட பதற்ற நிலையினால் அங்கு சிலரின் மோட்டார் சைக்கிள்களை பொலிசார் கைப்பற்றினர்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் தொடர்பாக இன்று (6.12.2016) செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் முன்னிலையில் கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள் தொடர்பாக தெரிவித்தனர்.
இதன் போது இரண்டு இலட்சம் ரூபா பிணை முறியில் உரிமையாளர்களிடத்தில் மோட்டார் சைக்கிளை ஒப்படைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா உத்தரவிட்டார்.
இதனடிப்படையில் குறித்த எட்டு மோட்டார் சைக்கிள்கள் உரியைமாளர்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டதாக மட்டக்களப்பு பொலிசார் தெரிவித்தனர்.
இந்த மோட்டார் சைக்கிள்கள் தொடர்பான வழக்கின் போது சட்டத்தரணிகள் பலரும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.சாஜில்
