க.பொ.த.சாதாரண தர பரீட்சை எழுத வந்த முஸ்லீம் மாணவர்களை திடீரென பரீட்சை எழுத விடாமல் பெரும்பாண்மை இனத்தை சேர்ந்த பரீட்சை மேற்பார்வையாளர்கள் முஸ்லீம் மாணவ மாணவிகளிடம் முஸ்லிம்களின் பர்தா ஹிஜாப் போன்றவற்றையும் முஸ்லீம் மாணவர்களிடம் அவர்களின் தாடியையும் அகற்றவேண்டும் என கடும் விவாதத்திற்கு 06.12.2016 மத்தியில் பரீட்சை எழுதிய நிலையில் மீண்டும் நாளை வரும்போது முழுவதும் அகற்றப்பட்டு வந்தால் மாத்திரமே பரிட்சை நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதை அடுத்து குறித்த பிரதேச மக்கள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
இதனை அடுத்து கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மாகாண கல்வி பணிப்பாளர் நிஸாம் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
அதனை அடுத்து விசேடமாக இன்றே குறித்த முள்ளிப்பொத்தானை சிங்கள மகா வித்தியாலயத்தில் இடம்பெறும் பரீட்சை நிலையத்திற்கு மாகாண பணிப்பாளர் நிஜாம் மற்றும் கந்தளாய் வலைய கல்வி பணிப்பாளர் அடங்கிய விசேட குழுவினர் உரிய பரீட்சை நிலையத்திற்கு உடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.
குறிப்பிட்ட இவ்விடயம் தொடர்பில் விசேட குழு ஒன்றை இன்றே அனுப்பி அவை சுமூகமாக இடம்பெறும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் மாகாண பணிப்பாளர் நிஸாம் தெரிவித்ததாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் தெரிவித்தார்.
